அய்மான் பைபத்துல் மால் பணிகள் தாயகத்தில் தொடங்கியது.

அய்மான் பைபத்துல் மால் பணிகள் தாயகத்தில் தொடங்கியது.

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் துவக்கப்பட்டுள்ள அய்மான் பைத்துல் மால் முறைப்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு தனது சேவையை துவக்கியுள்ளது.

aiman-karaikudi

போதிய நிதியின்றி காரைக்குடியில் இயங்கி வரும் பைத்துல் மால் அமைப்புக்கு முதல் கட்டமாக அய்மான் பைத்துல் மாலில் இருந்து 1 வருட ஒப்பந்த அடிப்படையில்
வட்டியில்லா கடனாக ரூ. 1,00,000/- வழங்கப்பட்டது.

aiman-karaikudi-donate

மதுரை அருகில் உள்ள சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் குக்கிராமம் பள்ளிச் சந்தை.
ஆண்கள் லாரி ஓட்டுனர்களாகவும், விவசாயிகளாகவும்,
பெண்கள் தையல் தொழில் செய்யக் கூடியவர்களாகவும் உள்ள இம்மக்களுக்கு முதல் 2 மாதம் தொழில் ஏற்படுத்தவும், மூன்றாவது மாதத்தில் இருந்து கடனை திருப்பி கொடுக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வட்டியில்லா இவ்விரு கடன் ஒப்பந்தங்களும் அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

அல்ஹம்துலில்லாஹ்..