அபுதாபி அய்மான் சங்கம்சார்பில் கல்வியாளர் சகோதரர் CMN சலீம் அவர்களுக்கு வரவேற்பு.

அஸ்ஸலாமு அழைக்கும் வராஹ்.
அபுதாபி அய்மான் சங்கம்சார்பில் சகோதரர் CMN சலீம் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி.
அமீரகம் வருகை புரிந்துள்ள கல்வியாளர் சகோதரர் CMN சலீம் அவர்களுக்கு இன்று (13-03-2016) மாலை அபுதாபி செட்டிநாடு உணவக அரங்கத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

188 189

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை மௌலவி முஹம்மது அப்பாஸ் மன்பஈ இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சங்கப் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் அனைவரையும் வரவேற்று அறிமுகவுரை நிகழ்த்தினார்.

சங்கத்தின் துணைச் செயலாளர் காயல் ஷேக்னா, அதிரை கவியன்பன் கலாம், அதிரை அப்துல் மாலிக், மௌலவி ஹிதாயதுல்லாஹ் நூரி, அபுல்ஹசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கல்வியாளர் CMN சலீம் அய்மான் சங்கத்தின் பணிகளை பாராட்டியும், தனக்கு அளிக்கப்ட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் கீழை ஜமால், துணைத் தலைவர் திருவாடுதுறை அன்சாரி, செயற்குழு உறுப்பினர்களான காயல் அன்சாரி, கொள்ளுமேடு மௌலவி முஹம்மது அப்பாஸ், ஆடுதுறை அப்துல் காதர், லால்பேட்டை சல்மான், காயல் லெப்பை தம்பி, அதிரை தௌசீஃப் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *