சென்னை புதுக் கல்லூரி முன்னாள் முதல்வருக்கு அபுதாபியில் வரவேற்ப்பு நிகழ்ச்சி…

1A

1oசென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா.டாக்டர் அப்துல் மாலிக் அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி செட்டிநாடு உணவக அரங்கில் 23/10/2016 ஞாயிறு மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத்தின் மூத்த தலைவரும்,திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான களமருதூர் ஹாஜி.A. ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில் பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிறுவன அதிபர் ஹாஜி.அப்துல் ஹமீது மரைக்காயர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை அய்மான் சங்க செயற்க்குழு உறுப்பினர் அதிரை S. தவ்ஸீஃப் ரஹ்மத்துல்லாஹ் இறைவசனங்கள் ஓதி துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது அனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உறையை நிகழ்த்தினார்.

சென்னை புதுக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா.டாக்டர் அப்துல் மாலிக் தனது ஏற்புரையில் கல்வியின் முக்கியத்துவம், ஆங்கிலம் மற்றும் அரபி மொழிகள் கற்பதன் அவசியம் மற்றும் கல்லூரியின் வளரச்சிக்கு சமுதாயம் எவ்வாறு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினார்.

முன்னாள் மண்டல கல்லூரிக் கல்வி உதவி இயக்குநர் திரு.ரவி ஷங்கர் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் பதவி வகித்த காலங்களில் புதுக் கல்லூரிக்கு செய்யப்பட வேண்டிய பணிகளை செய்யும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையுடன் குறிப்பிட்டு பேசினார்.

திருமதி ஜெயந்தி ரவி ஷங்கர் உள்ளிட்ட
சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் சங்கப் பொருளாளர் கீழை முஹம்மது ஜமாலுத்தீன் சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கினார்.

புதுக்கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் கேரளா ஷாஜஹான், லால்பேட்டை இஸ்மாயில் ஆகியோர் பேசினர்.

எழுத்தாளர் கனவுப் பிரியன் என்கிற யூசுப் தான் எழுதிய கூழாங்கற்கள் நூலை சிறப்பு விருந்தினருக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் அபுதாபியில் உள்ள சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் ஜமாஅத் நிர்வாகிகள், தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை அய்மான் சங்க துணைப் பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தொகுத்து வழங்கினார்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அறிவித்து, அபுதாபியில் அய்மான் சங்கம் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்ட அனைவரும் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்க நிர்வாகிகளான காயல் உமர் அன்சாரி, லால்பேட்டை முஹம்மது அப்பாஸ்,கீழை அல்லா பக்ஸ்,தவ்ஃபீக் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.⁠⁠⁠⁠

 1B

1C 1D 1E 1f 1g 1i 1j 1k 1l 1m 1n 1o 1p 1q 1r 1s 1t 1u 1v 1w 1x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *