விடை பெற்றார் அய்மான் தலைவர் அல்ஹாஜ் அதிரை ஷாஹுல் ஹமீது

1E

1Aவிடை பெற்றார் அய்மான் தலைவர் அல்ஹாஜ் அதிரை ஷாஹுல் ஹமீது .

அமீரகத்தின் தாய்ச் சபை அய்மான் சங்கத்தின் புதிய தலைவராக ‘கனிமொழிக் கவிஞர் ” களமருதூர் J ஷம்சுதீன் ஹாஜியார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சகோதர அமைப்புகள் வாழ்த்து!!

அமீரகத்தின் மிகப் பழமையான அமைப்பு அய்மான் சங்கத்தின் தலைவர் அதிரை A ஷாஹுல் ஹமீது இன்று விடை பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைவராக களமருதூர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அய்மானின் மூத்த நிர்வாகியும் முன்னாள் தலைவருமான கீழை செய்யது ஜாஃபர் ஷம்சுதீன் ஹாஜியார் பெயரை முன் மொழிய, சங்கத்தின் பொதுச் செயலாளர் காயல் SAC ஹமீத் அதனை வழி மொழிந்தார்.

அபுதாபி அரப் உடுப்பி அரங்கத்தில் வைத்து நடந்த எளிய விழாவில் அய்மான் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி அதிரை ஷாஹுல் ஹமீது அவர்களின் சேவைகளை நினைவு கூர்ந்தார்.

அய்மான் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் அவர்களின் உரையை தொடர்ந்து, சகோதர அமைப்புகளான அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் சாம்சன், தமுமுக மண்டலச் செயலாளர் ஷேக் தாவூது, அபுதாபி காயிதே மில்லத் பேரவை நிர்வாகி ஆவை அன்சாரி, லால்பேட்டை ஜமாஅத் தலைவர் யாசர் அரஃபாத், காயல்பட்டினம் ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மவுலவி ஹபீபுர் ரஹ்மான் மஹ்ளரி, ஐஎம்எஃப் செயலாளர் காதர்மீரான், எஸ் டீ பீ ஐ ஷபீக் மீரான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னாள் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீதுக்கு நினைவுப் பரிசை இந்நாள் தலைவர் ஷம்சுதீன் ஹாஜியார் வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் காயல் VST ஷேக்னா மற்றும் செயலாளர் கொள்ளுமேடு ஹாரிஸ் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

அதிரை கவியன்பன் கலாம் ஷாஹுல் ஹமீதின் சேவைகளை நினைவூட்டும் கவிதையினை வாசித்தார்.

திருச்சி ‘அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர்கள் மெளலவி ராஜ் முஹம்மது ஆலிம், மெளலவி முஹம்மது ஜலாலுத்தீன் ஆலிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மவுலவி ராஜ் முஹம்மது ஆலிம் சிறப்புரை வழங்கினார்.

லால்பேட்டை சல்மான் நன்றி கூறினார்.

அமீரகத்தின் மூத்த உலமாவும், அரபி அறிஞருமான மவ்லவி பாஷா ரஷாதியின் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி ஹமீது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

காயல் அன்சாரி, கீழை அல்லா பக்ஷ், லால்பேட்டை இஸ்மாயில், ஆடுதுறை முஹம்மது அப்துல் காதிர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

2g1A1B1C1D1E1l1m1q1r2a2b2c2e2f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *