ஜல்லிக்கட்டு போராட்டம்: அபுதாபி அய்மான் சங்கம் முழு ஆதரவு

11

10ஜல்லிக்கட்டு போராட்டம்: அபுதாபி அய்மான் சங்கம் முழு ஆதரவு

அபுதாபியில் நேற்று நடந்த அய்மான் சங்க நிக‌ழ்ச்சியில், தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது வாசித்து மக்கள் முன் முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தில் உலகின் மிகப் பழமையான கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். அவ்வாறான தமிழர்களின் காலாச்சாரத்தை கட்டிக் காக்க போராடும் வீரமும் அர்ப்பணிப்பும் மிக்க நம் இளைஞர்களை பாராட்டுவதோடு, அவர்களின் போராட்டம் வெற்றி பெற உறுதுணையாக நிற்போம் என்று கூறப்பட்டிருத்தது.

அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் பலத்த ஆரவாரத்துடன் தங்கள் ஏகோபித்த ஆதரவினை தெரிவித்து தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.

இந்த கூட்டத்தில், அய்மான் சங்கத் தலைவர் ஜே.ஷம்சுதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் லால்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை, மேலதிருப்பந்துருத்தி ஆகிய ஊர் ஜமாஅத்தின் நிவாகிகளும், பாரதி நட்புக்காக மைப்பின் நிர்வாகி கலீல் ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியினை அய்மான் துணைப் பொதுச்செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். லால்பேட்டை சல்மான் ந‌ன்றி கூறினார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் அமைப்பில் அபுதாபி அய்மான் சங்கமே ஜல்லிக்கட்டுக்காக தாயகத்தில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக முதல் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *