மனநிறைவைத் தந்த மாமறை திருக்குர்ஆன் மஜ்லிஸ்

1A

மனநிறைவைத் தந்த மாமறை திருக்குர்ஆன் மஜ்லிஸ்

அய்மான் சங்கத்தின் சார்பாக தர்த்தீல் திலாவத்தல் குர்ஆன் மஜ்லிஸ் இறையருளால் இன்று அபுதாபியில் சிறப்புடன் துவங்கியது.

அய்மான் பொதுசெயலாளர் இல்லத்தில் துவக்கப்பட்ட இந்த முபாரக்கான மஜ்லிசை அபுதாபி தமிழ்ச்சமூகத்தின் தலை சிறந்த காரியான சகோ. ஹாபிழ் இத்ரீஸ் மரைக்காயர் தனது இனிமையான கிராஅத் மூலம் துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க‌ பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீத் தனது துவக்கவுரையில் திருக்குர்ஆன் திலாவத்தின் நன்மைகளை எடுத்துக்காட்டி பேசினார்.

அய்மான் மூத்த நிர்வாகி பண்டாரவடை நஜீமுல்லா திருக்குரானை தஜ்வீத் முறையில் எவ்வாறு ஓதுவது என்பதனை மிக‌ அருமையாக விளக்கினார். பங்கெடுத்த சகோதரர்கள் தஜ்வீத் வகுப்பின் நேரத்தை அதிகரிக்க கோரிக்கை முன் வைத்தனர்.

தொட‌ர்ந்து கலந்து கொண்ட‌ அனைவரும் திருக்குர் ஆன் ஓதினர்.

நிறைவாக, மவ்லவி எஸ்.எம்.பி ஹுசைன் மக்கி மஹ்ழரி திருக்குர் ஆனின் மகிமையை ஹதீதுகளின் ஆதாரத்தோடு விளக்கிப் பேசினார். அய்மானின் இந்த முயற்சி பல்கிப் பெருகுவதோடு, திருக் குர் ஆன் ஓதத் தெரியாதவர்களையும் மனதிற்கொண்டு, திருக்குர் ஆன் வகுப்புக்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்ற தன் அவாவை முன் வைத்தார்.

அய்மான் துணைப் பொதுச்செயலாளர் லால்பேட்டை மவ்லவி ஏ.எஸ்.அப்துர் ரஹ்மான் ரப்பானி தன் நன்றியுரையின் போது, நமது மார்க்க சேவைகளில் அருள்மறை திருக்குர் ஆனுக்கு ஆற்றும் சேவைக்கு இணையாக எதுவும் இல்லை என்றும் பிரிந்து கிடக்கும் சமுதயத்தை ஒன்று சேர்க்கும் வல்லமை இது போன்ற குர் ஆன் மஜ்லிசிற்கு நிச்சயம் உண்டு என்பதை எடுத்துக் கூறினார்.

மாண்புயர் திருக்குர் ஆன் மஜ்லிசை நடத்தும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக அடுத்த அமர்வு அய்மான் பொருளாளர் கீழை ஜமால் அவர்கள் இல்லத்தில் வைத்து அடுத்த திங்கள் இரவு (16/01/2017) நடைபெறும் அன்று அறிவிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *