அய்மான் முன்னாள் தலைவர் கீழை செய்யது ஜாஃபர் விடை பெற்றார்

2f

2hகடந்த 38 வருடங்களாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டவரும், அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவராகவும் ஏனைய முக்கிய பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றியவருமான கீழை செய்யது ஜாஃபர் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அமீரகத்திலிருந்து விடை பெற்றார்.

அவரை பாராட்டி வழியனுப்பும் முகமாக அய்மான் சங்கம் வழியனுப்பு மற்றும் நன்றி தெரிவித்தல் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.

உணர்ச்சிப்பூர்வமாக நடந்த வழியனுப்பு நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் செய்யது ஜாஃபர் அவர்களது சேவையை நினைவு கூர்ந்தனர்.

மவ்லவி ஷர்தீபுன் மன்பயீ திருக்குர்ஆன் வசனங்கள் ஓதி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்புரையாற்றினார்.அப்போது செய்யது ஜாஃபருடனான தனது 17 ஆண்டுகால உறைவையும் அவரது சேவை மனப்பான்மையையும் நினைவுகூர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து லால்பேட்டை ஜமாஅத் தலைவர் யாசர் அரஃபாத், காயிதேமில்லத் பேரவை ஆவை அன்சாரி, மர்ஹபா நலச் சங்க நிர்வாகி ரஃபி அஹமது, காயல் நலச் சங்க நிர்வாகி ஏ.ஆர். ரிஃபாயி, கீழக்கரை ப‌ஹருத்தீன் ஆகியோர் செய்யது ஜாஃபரின் சேவையை நினைவு கூர்ந்து பேசினர்.

அய்மானின் நீண்ட வரலாற்றில் அவருடன் வெகு காலம் இணைந்து பணியாற்றிய அய்மான் கல்லூரியின் துணைத்தலைவர் முதுகுளத்தூர் ஹஸன் அஹமது, கல்லூரி செய‌லாளர் ஹபீபுல்லா ஆகியோர், செய்யது ஜாஃபர் அவர்களது அதீத திறமைகளையும், சேவை மனப்பான்மையையும், பிறருக்கு உதவும் அன்புள்ளத்தையும் விவரித்து பேசினர்.

மவ்லவி காயல் எஸ்.எம்.பி ஹுசைன் மக்கி, செய்யது ஜாஃபர் தன் மீது பொழிந்த அன்பினை நினைவுகூர்ந்து, அவருடைய குடும்பத்தில் தானும் ஒருவராகிப் போனதாகக் கூறினார்.

அய்மான் தலைவர் கனிமொழிக்கவிஞர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் பேசும் போது தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவருக்கிருந்த புலமையை போற்றினார். செய்யது ஜாஃபர் மிகக் கடினமான உழைப்பாளி. கல்விச் செல்வம் எங்கிருந்தாலும் தேடிச் சென்று தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் கல்வியாளர் என்று பாராட்டினார்.

நிகழ்ச்சியின் மகுடமாக, தான்சானிய அமீரக சங்க தலைவர் அஹமது முபாரக் கலந்து கொண்டு செய்யது ஜாஃபர் தன்னை வழிநடத்திய‌ குரு என்று குறிப்பிட்டார்.

அய்மான் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன், துணைத் தலைவர் காயல் வீ.எஸ்டீ. ஷேக்னா, துணைப் பொதுச்செயலாளர் லால்பேட்டை அப்துர் ரஹ்மான் ரப்பானி, ஆடிட்டர் அப்துல்லா, காயல் அன்சாரி, தவ்சீப் ரஹ்மத்துல்லா, லால்பேட்டை அப்பாஸ், கொள்ளுமேடு ஹாரிஸ், ஆடுதுறை அப்துல் காதர், கீழை அல்லாபக்ஷ், கீழை தவ்ஃபீக், தோஷிபா சாதிக், ஆகியோரும் நிகழ்ச்சியில் செய்யது ஜாஃபர் அவர்களை பாராட்டி பேசினர்.

இறுதியாக செய்யது ஜாஃபர் ஏற்புரை ஆற்றினார். அப்போது தன்னை ஆளாக்கிய தன் தாயை நினைவு கூர்ந்தார். இன்றைய இளைஞர்கள் தங்களின் த்னிப்பட்ட திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டுமென அறிவுறுத்தினார். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அய்மானை வளர்க்க இளைஞர்கள் முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்தார். அய்மான் சங்கம் கியாமத் நாள் வரை மக்கள் பணியாற்ற வேண்டுன்பதே தன்னுடைய பிரார்த்தனை என்று கூறி அனைருக்கும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியை லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி தொகுத்து வழங்கினார்.

லால்பேட்டை சல்மான் நன்றியுரை ஆற்றினார்.

2i 2h 2g 2f 2e 2b 2a 1r 1q 1m 1l 1E 1D 1C 1B 1A

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *