கவிக்கோ அப்துல் ரஹ்மான் மறைவுக்கு அய்மான் சங்கம் இரங்கல்.

1B

1Cகவிதை உலகின் அணிகலன் கவிக்கோ மறைந்தார்…

அய்மான் சங்கம் இரங்கல்.

 

தமிழ் உலகம் ஏற்றிப் போற்றிய கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் இறைவனின் நாட்டப்படி இன்று 02/06/2017 அதிகாலை வஃபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக திறம்பட செயலாற்றி பெருமை சேர்த்தவர்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தை உருவாக்க அரும்பாடுபட்டவர். பல்வேறு இலக்கிய மாநாடுகளை நடத்திக் காட்டிய தமிழ் கவிஞர்.

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய விழாக்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அருமையான, ஆழமான உரைகளை நிகழ்த்தியவர் இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

வல்ல இறைவன் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களை பொருத்திக் கொள்வானாக..
அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அய்மான் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *