அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் கலந்தாய்வு கூட்டம் ; ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு.

1B
அபுதாபி: அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் சமுதாய கலந்தாய்வு கூட்டம் அபுதாபி செட்டி நாடு உணவகத்தில் 18-6-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை அய்மான் சங்க பொருளாளர் கீழை ஜமாலுதீன் தலைமையில் நடைப்பெற்றது.
அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை சாகுல் ஹமீது நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.  அய்மான் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் அருள் மறை திருக்குர்ஆனின் வேத வரிகளை ஒதி துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மவ்லானா மவ்லவி காயல் எஸ்.எம்.பி.ஹூசைன் மக்கி மஹ்லரி, ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மவ்லானா மவ்லவி ஏ.முஹம்மது ரிழா பாக்கவி ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.

எழுத்தாளரும் ஊடகவியாளருமான ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.

அய்மான் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஹாரிஸ் மன்பஈ நன்றி கூறினார்.

மவுலவி முஹம்மது பாஷா ரஷாதி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் வந்திருந்தோருக்கு, நூற்றுக் கணக்கான இஸ்லாமிய நூல்கள் அய்மானின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் நிர்வாகிகள் அதிரை ஷாஹுல் ஹமீது, காயல் அன்சாரி, லால்பேட்டை அப்பாஸ் மிஸ்பாஹி , கீழை அல்லா பக்ஷ், சாதிக், முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சங்கைமிகு உலமாக்கள் , அனைத்து இயக்க நிர்வாகிகள், பல்வேறு ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

அய்மான் நிர்வாகிகள் முஹம்மது அன்சாரி, முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி , அல்லா பக்ஷ், ஆடுதுறை அப்துல் காதர், பசுபதிகோவில் சாதிக், காயல் ஷேக் ஆகியோர் இஃப்தார் மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நிழற்பட ஒருங்கிணைப்பு : நன்றி , கேமரா கவிஞர் காயல் சுபுஹான் பீர் முஹம்மது

Image may contain: 4 people, people sitting and indoor
Image may contain: 3 people, people smiling, people standing and indoor
Image may contain: 4 people, people smiling, people standing, beard and indoor
Image may contain: 4 people, people standing, beard and indoor
Image may contain: 5 people
1B 1C 1D

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *