LATEST AIMAN NEWS
Home / EVENTS / அய்மான் சங்கம் செயற்குழு முடிவுகள்

அய்மான் சங்கம் செயற்குழு முடிவுகள்

அய்மான் சங்கம் செயற்குழு முடிவுகள்

அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் 10/01/2018 புதன் கிழமை மாலை அதன் பொதுச் செயலாளர் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விபரம்:

மூன்று தலைமுறைகள் கண்ட அமீரக தமிழர்களின் பழம்பெரும் அமைப்பான அய்மான் சங்கத்தின் வரலாற்றினை கூறும்
ஆவணப்படம் (documentary) வெளியீட்டு விழா, 
அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா, 
அய்மான் சங்கத்தின் 37-வது ஆண்டு விழா,
 
ஆகிய நிகழ்வுகளை 23/02/2018 அன்று தலைநகர் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கத்தில் நடத்துவது.

நோபிள் மரைன் குழுமங்களின் தலைவர் நாம் வாழும் காலத்தின் பாரிவள்ளல்
“சமுதாயப் புரவலர்” நோபிள் M.ஷாஹுல் ஹமீது சாஹிப்
அவர்களுக்கு அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கி பெருமை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியருமான 
பேராசிரியர் KM காதர் மொகிதீன் Ex MP அவர்கள்
கலந்து கொண்டு அமீரக சாதனைத் தமிழர் விருதை வழங்கி நிறைவுப் பேருரை நிகழ்த்த உள்ளார்கள்.

அய்மான் சங்க முன்னாள் தலைவரும் கீழக்கரை டவுன் காஜியுமான 
காஜி AMM. காதர் பக்ஸ் ஹுஸைன் சித்தீகி MA அவர்கள்
அய்மான் ஆவணப் படத்தை வெளியிட உள்ளார்கள்.

நிகழ்வை சிறப்புற நடத்த பல்வேறு குழுக்கள் அமைத்து பணிகள் துவக்குவது உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

அமீரக தமிழ் மக்கள், தங்கள் வரலாறு கூறும், இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க அய்மான் சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top