LATEST AIMAN NEWS
Home / HISTORICAL ARTIFACPS / நெகிழ்ச்சியுடன் பிரியா விடை பெற்றார் உஸ்தாத் நஜீமுல்லாஹ்

நெகிழ்ச்சியுடன் பிரியா விடை பெற்றார் உஸ்தாத் நஜீமுல்லாஹ்

உஸ்தாத் பண்டாரவடை நஜீமுல்லாஹ் அவர்களின் உருக்கமான வரிகள்…

அய்மானின் அன்பு நெஞ்சங்களே, கண்மணிகளே! 1976 ஆம் ஆண்டு நான் அமீரகம் வந்தேன். எங்களை எல்லாம் ஒன்று சேர்த்து பயிற்றுவித்தது அய்மான்.

அன்றைய தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த அய்மானின் முன்னாள் தலைவர் திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாகிப், இன்றைய தலைவர் ஷம்சுதீன் ஹாஜி, காயல்பட்டினம் ஷேக் காக்கா, அஹமது மொகிதீன் காக்கா, அன்புச் சகோதரர் காஜி காதர் பக்ஷ் போன்றோரின் கடின உழைப்பில் உருவானது அய்மான் சங்கம்.

காஜி காதர்ப பக்ஷ், இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தொலைநோக்குடன் என்னிடம் கூறுவார். “சமுதாய ஒற்றுமைக்காக இந்த அய்மானை பாடுபட்டு உருவாக்கினோம். அது நம்மோடு நின்று விடக் கூடாது. இறைவனருளால் தலைமுறை தலைமுறையாகத் தொடர வேண்டும்” என்று.

அல்ஹம்துலில்லாஹ் இன்று அய்மானின் மூன்றாவது தலைமுறையை என் கண்கள் குளிரக் கண்டவனாக, அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கு உளப்பூர்வமாக நன்றி தெரிவித்தவனாக உங்களிடமிருந்தும், அமீரகத்திலிருந்தும் 43 ஆண்டு பணிக் காலத்தை நிறைவு செய்தவனாக விடை பெறுகிறேன்”

அய்மான் முன்னாள் செயலாளர், உஸ்தாத் பண்டாரவடை நஜீமுல்லாஹ்.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top