ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அய்மான் சங்கத்தின் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று 21 ஏப்ரல் 2018 அன்று செட்டி நாடு ரெஸ்டாரென்டில் சிறப்புடன் நடைபெற்றது.
அய்மான் சங்க தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார்.
அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
அய்மான் செயலாளர் பூந்தை ஹாஜா கிராஅத்துடன் வரவேற்புரையாற்றினர்
அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் ரெஜினால்ட், ஆடிட்டர் பிரின்ஸ், அபுதாபி தமிழ் மக்கள் மன்றத் தலைவர் சிவா ஆகியோர் துவக்க வுரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பேரா. முகம்மது ரபீக் MCA. MBA அவர்கள் இந்தியாவில் உள்ள உயர் கல்வி படிப்பு, அரசு கல்வி உதவித்தொகை, வேவை வாய்ப்புகள், குறித்து சிறப்புரை யாற்றினார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில், மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இறுதியாக அய்மான் சங்க செயலாளர் பசுபதி கோவில் சாதிக் பாட்சா அவர்கள் நன்றி கூறினார் .
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்க பொருளாளர் கீழை ஜமாலுதீன் நிர்வாக குழு உறுப்பினர்கள் :- பூந்தை ஹாஜா , ஆவை.அன்சாரி , பிர்தவ்ஸ் பாஷா, பசுபதிகோவில் சாதிக் , அப்துல் காதர், காயல் லெப்பை தம்பி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.