எகிப்து காரி அஷ்ஷெய்க் அப்துல் பாரி அவர்களின் அழகிய குரல் வளத்தில், பேராசிரியர் திருவை.அப்துர் ரஹ்மான் அவர்களின் அழகு தமிழ் மொழி பெயர்ப்புடன் உருவாக்கப்பட்டுள்ள குர்ஆன் அய்மான் செயலி (Quran Aiman Android App) 12/05/2018 சனிக் கிழமை மாலை அபுதாபியில் வெளிட்டு துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவரும், திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜி தலைமை வகித்தார்.
மெளலவி முஹம்மது ஹுஸைன் பஸரி கிராஅத் ஓதினார்.
அய்மான் பொதுச் செயலாளர் காயல் SAC ஹமீது வரவேற்று பேசினார்.
அய்மான் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் செயலி உருவாக்கம் குறித்து விளக்கினார்.
இலங்கை மெளலவி சிராஜ் ரஷாதி,அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் யாசிர் அரபாத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அய்மான் சங்க மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி சிறப்புரையாற்றினார்.
அய்மான் சங்கம் உருவாக்கிய தமிழ் மொழி பெயர்ப்புடன் கூடிய செயலியை சமுதாயப் புரவலர், பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் அதிபர் அல்ஹாஜ் J.அப்துல் ஹமீது மரைக்காயர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து நிறைவுரையாற்றினார்.
அய்மான் செயற்குழு உறுப்பினர் ஃபிர்தோஸ் பாஷா நன்றி கூற மெளலவி உபைதுர் ரஹ்மான் துஆ செய்தார்.
நிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க நிர்வாகிகள் முஹம்மது ஜமாலுத்தீன், முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, நிஜாம் முஹைதீன், ஆவை. முஹம்மது அன்சாரி, முஹம்மது அப்துல் காதர், சாதிக் பாட்ஷா, ஷேக் ஹமீது, லெப்பைத் தம்பி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியை துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி தொகுத்து வழங்கினார்.
அல் குர்ஆனை அய்மான் செயலியை டவுன்லோடு செய்ய லிங்கை க்ளிக் செய்யவும்.