LATEST AIMAN NEWS
Home / EVENTS / அய்மான் 439 வது நிர்வாகக் குழு கூட்டம்*

அய்மான் 439 வது நிர்வாகக் குழு கூட்டம்*

அய்மான் சங்கத்தின் 439 வது நிர்வாகிகள் கூட்டம் நேற்று 23/05/2018 புதன் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பின் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் ஹாஜி இல்லத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவர் களமருதூர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் தலைமை வகித்தார்

துவக்கமாக, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அய்மான் சங்கம் வன்மையான கண்டனங்களை பதிவு செய்தது. உயிரிழந்த சகோதர சகோதரிகள் அனைவரது குடும்பத்திற்கும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, ரமளாளில் மக்கள் பணி செயல் திட்டங்கள், தாயகத்தில் செயல்பட்டு வரும் அய்மான் பைத்துல் மால் பணிகளின் தமிழகம் தழுவிய பரவலாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டில், 20-க்கும் மேற்பட்ட சமுதாய பொது நிகழ்ச்சிகளை நடத்தி அதன் பலனை சமுதாயம் அடைவதற்கு வழிவகுத்த அய்மான் சங்கம் எதிர் காலங்களில் மேலும் வலுவுடன், பல சேவைகளை தொடர உறுதி பூண்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் செய்தது போல், அய்மான் உறுப்பினர்களால் தரப்படும் ஃபித்ரா தொகையினை அனாதை நிலையங்களுக்கு அனுப்பி உதவி செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

திருச்சியில் சிறப்பாக இயங்கி வரும் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – அபுதாபி அய்மான் சங்க நிர்வாகங்களிடையே மென்மேலும் தொடர்புகளை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சங்கத்தின் சார்பில் அய்மான் கல்லூரிக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை (Scholarship) குறித்து தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி விளக்கினார்.

ரமளான் பிறை 1 முதல் ரமளான் சிறப்புகள் பற்றி தொடர்ந்து தினம் தோறும் சிற்றுரை வழங்கி வரும் மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி அவர்களின் உரையை தொகுத்து குறுந்தகடு (CD) வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மெளலவி ஹுசைன் மக்கி மஹ்ளரி துஆவுடன் நிறைவு பெற்றது.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top