இஸ்லாமிய சரித்திரத்தில் தியாகத் தழும்பேறிய சுவனத்து மா மலர்கள், பத்ரு சஹாபாக்கள் தியாக வரலாற்றை மக்கள் மனதில் மீண்டும்பதியச் செய்யும் சிறப்பு நிகழ்ச்சியினை, அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் அய்மான் சங்கம் 39 வது ஆண்டாக நடத்தியது.
இஸ்லாமிக் சென்டரின் மூன்று அரங்கங்களும் நிரம்பி வழிந்த இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சேலம் பேராசிரியர் மௌலவி எம் அபூதாஹிர் பாக்கவி சிறப்புரை நிகழ்த்தினார்.
அய்மான் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது துவக்கவுரையாற்றினார்.
அய்மான் சங்கத்தின் பணிகளை மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டி, அய்மான் பைத்துல் மாலுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அய்மான் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக அய்மான் மார்க்கத்துறை செயலாளர் மௌலவி எஸ்.எம்.பி ஹுசைன் மக்கி மஹ்ளரி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
சமுதாயப் புரவலர்கள் பனியாஸ் அப்துல் ஹமீது ஹாஜியார், நோபுள் மரைன் ஷாஹுல் ஹமீது ஹாஜியார், அய்மான் நிர்வாகிகள் ஆவை அன்சாரி, காயல் உமர் அன்சாரி, பூந்தை ஹாஜா, ஆடுதுறை அப்துல் காதர், ஃபிர்தவ்ஸ் பாஷா,நிஜாம் மொகிதீன் முதலானோர் கலந்து கொண்டனர்.