அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு. கனிமொழி MP அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபி மதீனா ஜாயித் விழா அரங்கில் நடைபெற்றது.
திருக்குர்ஆன் திரு வசனம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்தோடு துவங்கிய
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் SAC ஹமீது தலைமையேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
பொருளாளர் கீழக்கரை முஹம்மது ஜமாலுத்தீன் முன்னிலை வகித்தார்.
துபை தோஷிபா எலிவேட்டர்ஸ் மேலாண்மை இயக்குனர் அறிவியல் அறிஞர் எம்.ஜெ.முஹம்மது இக்பால்,
அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான், துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், அமீரக திமுக தலைவர் அன்வர்,அதீப் குழுமம் நிர்வாக இயக்குனர் முஹம்மது அன்சாரி, ஈடிஏ மெல்கோ மேலாண்மை இயக்குனர் திரு. கிருஷ்ணன், ஆடிட்டர் பிரின்ஸ் இளவரசன்,அமீரக மக்கள் மன்றத் தலைவர் சிவக்குமார்,அஹலியா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் புவனேஸ்வர், மொய்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அய்மான் சங்கம் அபுதாபி தமிழர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிர்வாகிகள் நிஜாம் மைதீன், பிர்தவ்ஸ் பாஷா ஆகியோர் வாசித்தனர்.
கனிமொழி MP அவர்களுக்கான பாராட்டு பத்திரத்தை செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் வாசித்தார்.
திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திருமிகு.கனிமொழி MP அவர்கள் ஏற்புரை மற்றும் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியை அய்மான் துணைப் பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.
இறுதியாக அய்மான் துணைப் பொருளாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி நன்றி கூறினார்.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க நிர்வாகிகள் உமர் அன்சாரி, அல்லாஹ் பக்ஸ், முஹம்மது அப்துல் காதர், சாதிக் பாட்ஷா, ஷேக் ஹமீத், லெப்பை தம்பி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.