இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்களின் தகப்பனார் முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் என்.எம்.முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் நள்ளிரவு 1.00 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்த செய்தியறிந்து கவலையுற்றோம்.
அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும்,
அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் அய்மான் சங்கம் பிரார்த்திக்கிறது.