மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் MH ஜவாஹிருல்லா அவர்களின் தந்தை அல்ஹாஜ் அ.மு. ஹிதாயதுல்லாஹ் சாஹிப் அவர்கள் இன்று 03/08/18 அதிகாலை 1.30 மணியளவில் இறைவன் நாட்டப்படி காலமானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது உடல் உடன்குடி புதுமனை மேலத்தெருவில் உள்ள இல்லத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு (மாலை 3.30 மணி) அளவில் நடைபெறும்.
தனது தந்தையாரை இழந்து தவிக்கும் பேராசிரியர் முனைவர் MH ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், அவர் தம் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் பொறுமையை தந்தருள்வானாக.
மர்ஹூம் அவர்களை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக!
அய்மான் சங்கம் நமது ஆழ்ந்த கவலைகளையும் இரங்கலையும் பதிவு செய்கிறது!