அபுதாபி வருகை தந்துள்ள அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தாயகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அய்மான் பைத்துல் மாலின் தலைவருமாகிய அதிரை ஏ ஷாஹுல் ஹமீத் அவர்களை அய்மான் நிர்வாகிகள் சந்தித்து அளவளாவினர்.
இந்த சந்திப்பின் போது, அய்மான் பைத்துல்மாவின் செயல் பாடு மற்றும் விரிவாக்கம் குறித்து அதிரை ஷாஹுல் ஹமீத் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
வரும் காலத்தில் சிறு தொழில் முனைவோராடு அய்மான் பைத்துல் மால் இணைந்து பயணிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அமீரக மக்கள் அய்மான் பைத்துல் மாலுக்கு மனமுவந்து தங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்
விரைவில் தமிழகமெங்கும் பரவலாக்கப்பட இருக்கும் அய்மான் பைத்துல் மால் உண்டியல்களை அய்மான் சங்க நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்தார்.
மேலும் இச்சந்திப்பின் போது, அமீரக பொது மன்னிப்பு நிமித்தம் அய்மானுக்கு வரும் ஏராளமான கோரிக்கைகள், சந்தேகங்கள் குறித்தும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இச்சந்திப்பு அய்மான் பொதுச் செயலாளர் எஸ் ஏ சி ஹமீத் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.