பேராசிரியர் திருவை அப்துல் ரஹ்மான். திருகுர்ஆனின் மூலமொழி அரபியில் எகிப்து நாட்டின் காரி அப்துல் பாரி ஓத,அதே குறுந்தகட்டில் மொழிபெயர்ப்பிற்கு தமிழின் குரல் பதித்த மயக்கும் குரலோன்.
ஆம்…
தமிழ் கூறும் நல்லுலகிற்கு திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை முதன் முதலில் ஒலி வடிவில் தந்த அய்மான் சங்கம் தனது திருப்பணிக்கு தேர்ந்தெடுத்தது வெண்கலக் குரலுக்கு சொந்தக் காரர் பேராசிரியர் திருவை.அப்துர் ரஹ்மான் அவர்களை.
இன்று வரை இதே குரல் தான் இணைய வழியில் பல்வேறு பரிணாமங்களை கடந்து உலா வந்து கொண்டிருக்கிறது.
மக்கா நகரில் இருக்கும் அரிய குர்ஆன் மொழிபெயர்ப்பு வரிசையில் இவரது குரலும் சேர்க்கப்பட்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ். இது தமிழுக்கும்,அய்மானுக்கும்,பேராசிரியர் திருவை.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் கிடைத்த ஒரு வரம்.
திருக் குர்ஆன் பரவலாக்கப் பணியில் அய்மான் உருவாக்கிய Android குர்ஆன் செயலியை நமது www.aimansangam.comஇணையதளத்தில் பதிவிரக்கம் செய்து கேட்டுப் பயனடையுங்கள், நண்பர்களுக்கும் பகிர்ந்து நன்மையை அள்ளுங்கள்.