*ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு*
அய்மானின் அன்பு நெஞ்சங்களே,
கடந்த 18/10/2018 அன்று அபுதாபி முஸப்ஃபாஹ்வில் மரணமடைந்த ஏர்வாடி ராவுத்தர் நயினார் முஹம்மது மகன் (நிரவி சிக்கந்தர் பண்டாரி மருமகன்) சித்தீக் இப்ராஹிம் அவர்களின் மறைவுச் செய்தி சமூக வலைத்தளம் மூலம் கிடைக்கப் பெற்றதும் அய்மான் மார்க்கத் துறை செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி, சென்னை காதர் மீரான் பைஜி, முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, முஹம்மது ஹாரிஸ் மன்பஈ, நிஜாம் மைதீன்,பூந்தை ஹாஜா, ஹுஸைன் அல்லாஹ் பக்ஸ், சாதிக் பாட்ஷா,லெப்பை தம்பி உள்ளிட்டோர் ஏர்வாடியை சேர்ந்த அய்மான் முன்னாள் பொறுப்பாளர் சத்தார் பாய்,ராஜா முஹம்மது,தமீம்,மொய்தீன் உள்ளிட்ட ஜமாஅத் பிரமுகர்களுடன் ஆலோசித்து ஜனாஸாவை பெற்று அடக்கம் செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் எல்லா பணிகளும் முடிக்கப்பட்டு ஜனாஸா தொழுகை இன்று 02/11/2018 வெள்ளிக் கிழமை மதியம் 3:00 மணிக்கு கலீபா மருத்துவமனை பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது.
அய்மான் துணைப் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி
ஜனாசா தொழுகையின் சிறப்பையும், அதன் மூலம் கிடைக்கும் படிப்பினை குறித்தும் இரங்கல் உரையில் தெரிவித்தார்.
முன்னதாக அய்மான் நிர்வாகிகள், அபுதாபி அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து ஜனாசாவை பெற்று, இறந்தவரின் சொந்த பந்தங்களிடம் ஒப்படைத்து, நல்லடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவு செய்தனர்.
இறந்தவரின் குடும்பத்திற்கு அய்மான் நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி அன்னாரது மஃக்பிரத்திற்கு துஆ செய்தார்.
மறைந்த சகோதரரின் உறவுகள் அய்மான் சங்கத்திற்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்
அபிதாபி வாழ் தமிழ் சொந்தங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
*அய்மான் சங்கம்*
*அபுதாபி.*