LATEST AIMAN NEWS
Home / GENERAL / அபுதாபி அய்மான் சங்கத்தின் 443வது செயற்குழு கூட்டம்

அபுதாபி அய்மான் சங்கத்தின் 443வது செயற்குழு கூட்டம்

அபுதாபி அய்மான் சங்கத்தின் 443வது செயற்குழு கூட்டம், அதன் தலைவர் கனிமொழிக் கவிஞர் களமருதூர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் தலைமையில் நேற்று மாலை அபுதாபியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், இந்த மாதம் நடக்கவிருக்கும் உத்தமத் திருநபி உதய தின விழா மற்றும் டிசம்பர் இரண்டாம் தேதி நடக்கவிருக்கும் அமீரக தேசிய தின விழா ஒன்று கூடல் நிகழ்ச்சி ஆகியவை குறித்த நிர்வாக ஆலோசனைகள் நடைபெற்றது.

மீலாதுன் நபி நிகழ்ச்சி, நவம்பர் 22ம் தேதி வியாழனன்று இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக தாயகத்திலிருந்து வருகை தரும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா நிர்வாகி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது

அமீரக தேசிய தினமன்று ஒன்று கூடல் நிகழ்ச்சி, டிசம்பர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஏர்போர்ட் ரோடு கேஎப்சி பூங்காவில் வைத்து நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விரு நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்த தனித்தனி நிர்வாகக் குழுக்கள் அமைக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அய்மான்முன்னாள் நிர்வாகிகள் தேரிழந்தூர் தாஜுத்தீன், அப்துல் சத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் :
ஜே ஷம்சுதீன், கீழை ஜமாலுத்தீன், காயல் எஸ்ஏசி ஹமீது, லால்பேட்டை ஏஎஸ் அப்துல் ரகுமான் ரப்பானி, மெளலவி காயல் எஸ்எம்பி ஹுசைன் மக்கி மஹ்ளரி, ஆவை முஹம்மது அன்சாரி, முஹம்மது ராஜா அல்லாபிச்சை, லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி , கொள்ளுமேடு ஹாரிஸ் மன்பயி, கீழை அல்லா பக்ஷ், சென்னை நிஜாம் மொகிதீன், ஃபிர்தவ்ஸ் பாஷா, மெளலவி ஷர்புதீன் மன்பயி, பசுபதிகோயில் சாதிக், காயல் லெப்பை தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top