வளைகுடா நாடுகளில் வாழும் மக்களுக்காக குரல் கொடுத்த பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு அபுதாபி அய்மான் சங்கம் பாராட்டு
நேற்று 07/11/2018 பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வளைகுடா வாழ் இந்தியர்கள் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியத் தொழிலாளர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில், நாட்டிற்கு 15 லட்சம் கோடி வருமானம் ஈட்டி தந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக வளைகுடாவில் பணிபுரிபவர்களில் தென்னிந்தியர்களே அதிகம்.
இவற்றை மனதில் வைத்து, அவர்களுக்காக தமிழக அரசு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வாரியம் அமைக்க வேண்டும், இந்திய தூதரகங்களில் தென்னிந்திய மொழி பேசுபவர்கள் அதிகம் பணி அமர்த்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.
அய்மான் சங்கமும், பல ஆண்டுகளாக இக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தி வருகிறது.
(கடந்த 2010-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் அன்றைய முதல்வர் கலைஞர் இக்கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்டார். அடுத்து வந்த ஆட்சி மாற்றத்தால் இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது)
அதனடிப்படையில் மத்திய மாநில அரசுகளுக்கு அவற்றை மீண்டும் வலியுறுத்திய மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு அமீரகத் தமிழர்கள் சார்பில் அபுதாபி அய்மான் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது.