தமிழகத்தில் மட்டுமின்றி,இந்தியத் திருநாட்டில் நடைபெற்ற அத்தனை இயற்கை பேரிடர்களிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அய்மான் சங்கம், தன் அன்புக் கரங்களை, பொருளாதாரமாகவும், பொருளாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது கடந்த கால வரலாறாகும் .
கடந்த காலத்தில், அஸ்ஸாம், குஜராத் கலவரம்/ பூகம்பம்,
சென்னை பெருவெள்ளம், தானே புயல்,
கேரள பெருமழை வெள்ளம், கண்டியூர் தீ விபத்து,
கொடைக்கானல் 12 ஆலிம்களின் அகாலமரணம் என்று அய்மான் நீட்டிய உதவிக் கரங்களில் சிலவற்றைக் குறிப்பிட்டோம்.
தற்போது, கஜாபுயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் பேரழிவை சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கும் வேளையில், அய்மான் மீண்டும் மக்கள் பணியை தொடர்கிறது.
முதற்கட்டமாக அய்மான் பைத்துல்மால் மூலம் ஏராளமான நிவாரணப் பொருட்களை நாளை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்புகிறது இன்ஷா அல்லாஹ்.
இரண்டாம் கட்டமாக, எங்கள் நிவாரணப் பணிகளில் அய்மானும் எங்களோடு கைகோர்த்து செயல்பட வேண்டும் என்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே ஏ எம் முஹம்மது அபூபக்கர் கோரிக்கையை ஏற்று 100 குடும்பங்களுக்கான தேவைகளை அய்மான் பொறுப்பேற்றுக் கொண்டது.
அதன் முதற்கட்டமாக, நிவாரண பொருட்களுக்கான முன் பணத்தை, இன்று தென்காசியில்,பொதுச் செயலாளர் கே ஏ எம் முஹம்மது அபூபக்கர், மாநில சமூக நலப்பணி செயலாளர் மில்லத் இஸ்மாயீல்,மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, இளைஞர் அணி துணைத் தலைவர் எஸ்கேஎம் ஹபீபுல்லாஹ் ஆகியோர் முன்னிலையில், அய்மான் சங்கப் பொதுச் செயலாளர் எஸ் ஏ சி ஹமீது வழங்க, மாநில கல்விப் பணிச் செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் பெற்றுக் கொண்டார்.