அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் அய்மான் சங்கம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா தலைவர் ஜெ.ஷம்சுத்தீன் ஹாஜி தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.
சமுதாயப் புரவலர் பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீது மரைக்காயர், முஹம்மது ஸலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஏ.ஆபித் ஹலீம் கிராஅத் ஓதினார்.
அய்மான் சங்க துணைப் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்ற்று பேசினார்.
துபாய் ஈமான் துணைத் தலைவர் முஹம்மது மஃஹ்ரூப் துவக்கவுரையாற்றினார்.
அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைப் பொதுச் செயலாளரும், சென்னை மந்தைவெளி ஜும்ஆ மஸ்ஜித் இமாமுமான மெளலவி கா.மு. இல்யாஸ் ரியாஜி, அய்மான் மார்க்கத்துறை செயலாளரும், அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவருமான மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இறைவன் நாடினால் விரைவில் திருக்குர்ஆன் விளக்கவுரை கூட்டம் வாரம் தோறும் நடத்தப்பட அய்மான் சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி செயல் வடிவம் பெற இருப்பதை அறிவிப்பாக வெளிடப்பட்டது.
அய்மான் பைத்துல் மால் மூலம் பெறப்பட்ட கஜா புயல் நிவாரணங்கள் தாயகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வரும் தகவல் குறித்தும் அறிவிப்பு செய்யப்பட்டது.
அய்மான் சங்க செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க பொருளாளர் முஹம்மது ஜமாலுத்தீன்,நிர்வாகிகள் உமர் அன்சாரி, சாதிக் பாட்ஷா, நிஜாம் மைதீன்,பிர்தோஸ் பாஷா, முஹம்மது அப்துல் காதர், லெப்பை தம்பி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இறுதியாக அய்மான் துணைப் பொருளாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.