அபுதாபி : 47-வது அமீரக தேசிய தின விழாவை முன்னிட்டு அபுதாபி அய்மான் சங்கம் எதிர் வரும் டிசம்பர் 2, 2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமீரக தமிழ் சொந்தங்களின் ஒன்று கூடலை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி அபுதாபி ஏர்போர்ட் ரோடு KFC பூங்காவில் தலைவர் அல்ஹாஜ் ஜெ. ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது.
அன்றைய தினம் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு தனித்தனியே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து பரிசுகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிர்ஷ்டசாலிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது..
*போட்டிகள்*
வினாடி வினா
தமிழ் பேச்சுப் போட்டி
நினைவாற்றல் போட்டி
சாக்ரேஸ்
லெமன் & ஸ்பூன்
மியூசிக்கல் சேர்
ஓட்டப் பந்தயம்
*முக்கிய பரிசுகள்*
உம்ரா பயணம்
TV
தங்க நகை கூப்பன்
வீட்டு உபயோக பொருட்கள்
விளையாட்டு பொருட்கள்
பதக்கங்கள்
சிறப்பு விருந்தினர்களும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றனர்.
மதிய உணவு மற்றும் மாலையில் டீ வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை அய்மான் நிர்வாகிகள் SAC ஹமீது,அப்துல் ரஹ்மான் ரப்பானி,முஹம்மது ஜமாலுத்தீன்,முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, உமர் அன்சாரி,ஹுஸைன் மக்கி மஹ்லரி,முஹம்மது ஹாரிஸ் மன்பஈ,அல்லாஹ் பக்ஸ்,முஹம்மது அப்துல் காதர், VST ஷேக்னா,சாதிக் பாட்ஷா, நிஜாம் முகைதீன்,பிர்தோஸ் பாஷா, பூந்தை ஹாஜா, லெப்பை தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
தங்கள் வருகை குறித்த பதிவுகளை கீழ்காணும் நமது நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
முஹம்மது ஹாரிஸ்
050 3132925
அல்லாஹ் பக்ஸ்
055 9168771
சாதிக் பாட்ஷா
056 5096964
பிர்தோஸ் பாஷா
056 7617303
பூந்தை ஹாஜா மைதீன்
050 9228580