Home / EVENTS / அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு தலைநகர் அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின் 8-ம் ஆண்டு ஒன்று கூடலை அய்மான் சங்கம் மிகச் சிறப்புடன் நடத்தியது.

காலை முதல் நீண்ட வரிசையில் வருகையாளர்கள் பதிவும், மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து பகல் 11:45 மணி முதல் பொழுது போக்கு அம்சங்களும்,விளையாட்டு போட்டிகளும், பேச்சுப் போட்டிகளும் தனித்தனி இடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்குமாக தனித்தனியாக நடைபெற்றது.

அய்மான் சங்கத் தலைவர் ஜெ.ஷம்சுத்தின் ஹாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் RS தர்வேஷ் மொஹிதீன்,

புதாபி அஹலியா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் புவனேஷ்வர்,

பனியாஸ் பில்டிங் நிர்வாக இயக்குனர் அப்துல் ஹமீது மரைக்காயர்,

க்ரீன் நர்சரி பள்ளியின் தாளாளர் திருமதி. ஸ்ரீதேவி,

அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான்,

தமிழ் மக்கள் மன்றத் தலைவர் சிவக்குமார்,

மெளலவி பாஷா ரஷாதி,

அல்மனாக் டிரேடிங் நிர்வாக இயக்குனர் முஹம்மது அலி,

ஜெயலுக்காஸ் ஜுவல்லரி அபுதாபி மேலாளர் ரிஜீஸ், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்ட  முழு நாள் நிழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆத்தியது. நிறைவாக கலைந்து சென்றவர்கள் திரளாக சென்ற போது அய்மான் நிர்வாகிகளின் உள்ளத்தில் பேரானந்தத்தை உருவாக்கியதென்றால் மிகையல்ல.

துபாய்,அல்-அய்ன், ஷார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் குடும்பத்தோடு பலர் பங்கேற்றனர்.

இன்று டிசம்பர் 2-ல் பிறந்த நாள் காண்ட ஆடுதுறை முஹம்மது சமீர் மகன் யாசிர் அஹமதுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அபுதாபியில் தமிழர்களின் ஒன்று கூடலை நடத்தும் அய்மான் சங்க நிர்வாகிகள் இதை தங்கள் இல்ல நிகழ்வாக கருதி களப்பணியாற்றுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்.

அந்த வகையில் இந்த வருடம் பொதுச் செயலாலர் SAC ஹமீது,துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, பொருளாளர் முஹம்மது ஜமாலுத்தீன், துணைப் பொருளாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைத் தலைவர் ஷேக்னா லெப்பை,மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி, செயலாளர்கள் உமர் அன்ஸாரி, முஹம்மது ஹாரிஸ் மன்பஇ, நிஜாம் மொஹிதீன்,அல்லா பக்ஸ், பூந்தை ஹாஜா, சாதிக் பாஷா,பிர்தோஸ் பாஷா, அப்துல் காதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ரிபாயி, ஷேக் ஹமீது,அப்துல் ரஜ்ஜாக், லெப்பைத் தம்பி உள்ளிட்டோர் வெற்றிக்கு அயராது உழைத்து நிகழ்ச்சி சிறக்க துணை நின்றனர்.

நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்ட அய்மான் ஒன்று கூடல் நிகழ்வில்
அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், போட்டிகள் என முழு பெண்கள் பகுதியையும் ஜைனப் ஷேக்னா, வஸீலா அப்பாஸ், மஜ்னா ஆகியோர் மிகச் சிறப்பாக கையாண்டு பணியாற்றினர்.

நிகழ்ச்சி நிரல்

 

மருத்துவ முகாம்…

மதிய உணவு நேரம்…

விளையாட்டு போட்டிகள்..

பரிசுப்பு பொருட்கள்…

பரிசுளிப்பு நிகழ்ச்சி..

 

   

 

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top