அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை என 446-வது செயற்குழு கூட்டத்தில் அய்மான் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
அய்மான் சங்கத்தின் 446-வது செயற்குழு கூட்டம் தலைவர் ஹாஜி J. ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில்,பொருளாளர் முஹம்மது ஜமாலுத்தீன் இல்லத்தில் வைத்து 04/12/2018 செவ்வாய் மாலை நடைபெற்றது.
*நடந்து முடிந்த டிசம்பர் 2- தேசிய தின ஒன்று கூடல் நிகழ்வின் சாராம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
*கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அய்மான் பைத்துல் மால் சார்பாக ரூ.142,000/உதவி பொருட்களை நேரடியாக களத்திற்கு சென்று உரியவர்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்த பைத்துல் மால் தலைவர் அதிரை.ஏ. ஷாஹுல் ஹமீது அவர்களுக்கும், புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரின் வேண்டுகோளை ஏற்று பொதுச் செயலாளர் அபூபக்கரிடம் நேரிடையாக சென்று அய்மான் சார்பில் 100 குடும்பங்களுக்கு பொறுப்பேற்று நிவாரணத் தொகை வழங்கிய அய்மான் சங்க பொதுச் செயலாளர் SAC ஹமீது அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பட்டது.
2019 ஜனவரி 2-வது வாரத்தில் இருந்து திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை
அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும், அய்மான்
மார்க்கத்துறை செயலாளருமான மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி அவர்களை வைத்து வாரம் தோறும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேசிய தின ஒன்று கூடல் பரிசளிப்பின் போது விடுபட்ட மீரான் மைதீன் என்பவரை இன்றைய செயற்குழு கூட்டத்திற்கு நேரில் அழைத்து பரிசு வழங்கப்பட்டது.