LATEST AIMAN NEWS
Home / GENERAL / அபுதாபி வாழ் தமிழர்களின் மருத்துவ சேவை சம்மந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை

அபுதாபி வாழ் தமிழர்களின் மருத்துவ சேவை சம்மந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை

அபுதாபி வாழ் தமிழர்களின் மருத்துவ சேவை சம்மந்தமாக இன்று 02/09/2019 மாலை அய்மான் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் ஆகியோர் அஹலியா மருத்துவ மனை நிர்வாகத்தின் பிரதிநிதிகளான திரு. ஜிஜோ, திரு.பிலால் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அய்மான் சங்கம் மூலம் இது வரை அளிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மருத்துவ சலுகைக்கான அட்டைகள் தயாராகி வருவதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் இருந்து அபுதாபிக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு ஏதேனும் மருத்துவ தேவை அவசியம் ஏற்ப்பட்டால் அவர்களுக்கும் சலுகை வழங்க அய்மான் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளில் சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக உறுதியளித்தனர்.

துபாயில் உள்ள அய்மான் நிர்வாகிகள் பயன் பெறும் வகையில் அங்கு இயங்கும் அஹலியா கிளினிக் – கில் சலுகை வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்தோம்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி நல்ல பதிலை தருவதாக தெரிவித்து,அய்மான் சங்கத்திற்கு எல்லா நிலைகளிலும் அஹலியா மருத்துவ மனை துணை நிற்கும் என்றும் தெரிவித்தனர்.

தொடர்ந்து தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றும் தனியார் கம்பெனியின் மனித வள மேம்பாட்டு அலுவலர்களை நேரில் சந்தித்து இம்மாதம் இறுதியில் முஸஃப்பாவில் நடைபெற உள்ள இரத்த தான முகாமில் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டனர், அவர்களின் தரப்பு இரத்த கொடையாளர்களையும் நமது முகாமிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top