அய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம் நேற்று 14 செப்டம்பர் 2019 மாலை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி அவர்கள் தலைமையில் துணைப் பொதுச்செயலாளர் பூந்தை ஹாஜா இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கடந்த இரண்டு மாத கால பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
எதிர் வரக்கூடிய நிகழ்ச்சிளான இரத்தான முகாம்,மீலாது விழா மற்றும் அமீரக தேசிய தின ஒன்று கூடல் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.
வரும் செப்டம்பர் 27-ம் தேதி இரத்ததான முகாம் சிறப்புடன் நடைபெற பணியாற்றுவது.
நவம்பர் மாதத்தில் மாபெரும் மீலாது விழாவை ஏற்பாடு செய்து அதில் தாயகத்தில் இருந்து அறிஞர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து உரையாற்ற வைப்பது.
டிசம்பர் 2-ம் தேதி அமீரக தேசிய தின ஒன்று கூடலை வழக்கம் போல் வெகு விமரிசையாக கொண்டாட பூர்வாங்கப் பணிகளை துவக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.