LATEST AIMAN NEWS
Home / EVENTS / அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே…

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம். ஒரே நாளில் இரு வேறு இடங்களில் நடைபெற்றது!

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் 27/09/2019 வெள்ளிக் கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை காலிதியா இரத்த வங்கியிலும்,

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முஸப்ஃபா சபீர் மால் அருகில் மொபைல் இரத்த வங்கியிலும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது இரத்த தான முகாமை துவக்கி வைத்தார். நிகழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை அபுதாபி முகாமில் துணைத் தலைவர் கீழக்கரை ஹெச்.முஹம்மது ஜமாலுத்தீன்,பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன், சமூக நலத்துறை செயலாளர் மன்னார்குடி பிர்தோஸ் பாஷா, மக்கள் தொடர்புச் செயலாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா, நிர்வாகச் செயலாளர் கீழக்கரை ஹுஸைன் அல்லாஹ் பக்ஸ், அய்மான் முன்னாள் நிர்வாகி ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி ஆகியோரும்,

முஸப்ஃபா முகாமில் துணைப் பொருளாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், செயற்குழு உறுப்பினர் எமனேஸ்வரம் ஷர்புத்தீன் ஆகியோரும் அசராமல் நின்று தொடர்ந்து வருகை புரிந்து கொண்டிருந்த குருதிக் கொடையாளர்களை கனிவோடு வரவேற்று உபசரித்தனர்.

குருதிக் கொடையாளர்களை முகாமிற்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியில் திருப்பந்துருத்தி சகோ. முஹம்மது கலீபா, அரங்குடி சகோ. ரிஃபாயி, காரைக்கால் சகோ. அப்துல் காதர், பூந்தோட்டம் சகோ.அலாவுதீன், அய்யம்பேட்டை சகோ.அஸ்ரப் குழுவினர் ஈடுபட்டனர்.

கும்பகோனம் சகோ. பஷீர் அஹமது அவர்கள் வாகனம் தந்து உதவினார்கள்.

அபுதாபி தமிழ் மக்கள் மன்ற நிர்வாகிகள் திரு.சிவக்குமார், திரு.பழனி, ருவைஸ் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திரு.காமராஜ், திரு.கருப்பையா, திரு.சிவமணி, முஹம்மது இஸ்மாயில், திரு.ஜெயவேல் ஆகியோர் முகாமிற்கு நேரில் வருகை தந்து நமது சேவைகளை கண்டு சிலாகித்து, பாராட்டிச் சென்றனர்.

தேவிப்பட்டிணம் நலச் சங்க அபுதாபி செயலாளர் ஹாஜா முபீனுதீன் அவர்களோடு நிர்வாகிகள் வருகை தந்து குருதிக் கொடையும் வழங்கிச் சென்றனர்.

மதியம் 2 மணி முதல் இரத்த தான முகாமிற்கு வந்த வண்ணமிருந்தனர் இரவு 8.40 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

ருவைஸ் பகுதியிலிருந்து இரண்டு பேர், துபை, மற்றும்  ராசல்கைமா பகுதியிலிருந்து அபுதாபி வந்திருந்த நாண்கு பேர் இரத்ததானம் செய்தனர்.

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இம்முகாம் குறித்து இரத்த வங்கியின் மருத்துவர்களும், செவிலியர்களும் நமது அய்மான் சங்க சேவைகளை வெகுவாகப் பாராட்டி, நமது சங்கத்தின் சேவைகளை கேட்டறிந்து, ஆச்சரியமடைந்து இதயப் பூர்வமாக பாராட்டினர்.

எந்த ஒரு நிகழ்விலும் ஓரிருவர் தான் சிறப்பு விருந்தினராக இருக்க முடியும்.

குருதிக் கொடையளிக்க அய்மான் இரத்த தான முகமிற்கு வருகை தந்த அனைவருக்கும் மிக முக்கிய சிறப்பு விருந்தினர் (VVIP) என்கிற அந்தஸ்தை அய்மான் சங்கம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இரண்டு இரத்த தான முகாம்களின் பணிகளையும் துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன், செயற்குழு உறுப்பினர் சகோ. எமனை.ஷர்புத்தீன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

 

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top