அமீரகப் பயணம் மேற்கொண்டிருக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை குழுத் தலைவர் திரு.திருச்சி சிவா MP அவர்களுக்கு அபுதாபி இந்திய சமூக நல மையத்தில் அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் மற்றும் அய்மான் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
01/10/2019 செவ்வாய்க் கிழமை மாலை 7:30 மணியளவில் அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத் தலைவர் திரு. நடராஜன்,அபுதாபி தமிழ் மக்கள் மன்றத் தலைவர் திரு.சிவக்குமார்,அய்மான் சங்க பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி,தமிழ் மக்கள் மன்ற பொதுச் செயலாளரும், அய்மான் சமூக நலத்துறை செயலாளருமான மன்னார்குடி பிர்தோஸ் பாஷா, அய்மான் சங்க துணைப் துணைப் பொதுச் செயலாளர் பூந்தை.ஹாஜா மைதீன், மக்கள் தொடர்புச் செயலாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா,அபுதாபி தமிழ் மக்கள் மன்ற துணைத் தலைவர் திரு.நீலகண்டன், திரு.பழனி, இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் இலக்கிய அணி செயலாளர் மன்சூர் அலி ,அபுதாபி திமுக நிர்வாகி ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பில் இணைந்து வரவேற்று
அய்மான் சங்கம் மற்றும் தமிழ் மக்கள் மன்றத்தின் சார்பில் அபுதாபி – திருச்சி நேரடி விமான சேவை.
அபுதாபியில் இறந்தவர்களின் உடலை தாயகத்திற்கு கொண்டு செல்ல அரசு உதவி
ஆகிய இரு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
அதனை பெற்றுக் கொண்டு அங்கிருந்தபடியே படித்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதியளித்து விரைவில் டெல்லியில் இது சம்மந்தமாக பேச மத்திய அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
கடந்த 39 ஆண்டுகளாக அபுதாபியில் சேவையாற்றி வரும் அய்மானைப் பற்றி அறிமுகம் செய்த போது, சமீபதத்தில் உங்கள் கல்லூரிக்கு சென்றிருந்தேன் என தான் கலந்து கொண்ட நிகழ்வின் நினைவுகளை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
– அய்மான் சங்கம் – அபுதாபி