LATEST AIMAN NEWS
Home / EVENTS / அபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

அபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்

அபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் மற்றும் இலவச மருத்துவ சிறப்பு சலுகை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

அபுதாபி அக் -05 அஹலியா மருத்துமனையுடன் இணைந்து அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மருத்துவ முகாம் மற்றும் அய்மான் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான அஹலியா மருத்துவ மனையின் சிறப்பு சலுகை கார்டு வழங்கும் நிகழ்ச்சி 04/10/2019 வெள்ளிக் கிழமையன்று மருத்துமனை கூட்ட அரங்கில் மாலை 6:30 மணிக்கு தொடங்கி இரவு 9:00 மணிவரை தொடர்ந்து நடைபெற்றது.

மருத்துவ முகாமில் உறுப்பினர்களுக்கான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்பட்டோருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

அய்மான் சங்கத்தின் மூலம் சிறப்பு சலுகைக்கான மருத்துவ விரைவு சேவை அட்டையை பயனாளிகளுக்கு அய்மான் துணைத் தலைவர் கீழக்கரை முஹம்மது ஜமாலுத்தீன், அல்ஜாபிர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் முஹம்மது ஆரிப், சிட்டிஸன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஹஸன் அலியார், அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி இணைச் செயலாளர் காதர் மீரான் ஃபைஜி, தேவிப்பட்டிணம் நலச் சங்கம் அபுதாபி செயலாளர் ஹாஜா முபீனுதீன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன், துணைப் பொருளாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், சமூக நலத்துறை செயலாளர் மன்னார்குடி பிர்தோஸ் பாஷா, மக்கள் தொடர்பு செயலாளர் பசுபதி கோவில் சாதிக் பாட்ஷா ஆகியோர் மருத்துவ மனை அதிகாரிகள் ஜிஜோ, பிலால் ஆகியோரோடு இணைந்து செய்திருந்தனர்.

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top