LATEST AIMAN NEWS
Home / GENERAL / அய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு

அய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு

அய்மான் சங்கத்தின் மூத்த தலைவரும் மிகச் சிறந்த நிர்வாகியுமாகிய திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்களுடனான தனது சந்திப்பு குறித்து மமக/தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச் ஜவாஹிருல்லா அவர்களுடைய உணர்வுப் பூர்வமான பதிவு.

💢 இன்று திருச்சியில் பல்வேறு இயக்க அலுவல்களுக்குடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு என் நெஞ்சம் நிறைந்த அய்மான் அப்துல் வஹ்ஹாப் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

நாகபட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர். நீண்ட காலமாக அபுதாபில் அரசு முதலீடு நிறுவனத்தில் உயர்நிலை அலுவலராக பணியாற்றியவர்.

எனது மாணவர் இயக்க காலம் தொட்டு என்னுடன் தொடர்பிலிருந்தவர். என் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.

அபுதாபியில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழக முஸ்லிம்களை ஒருங்கிணைத்து அபுதாபி இந்திய முஸ்லிம் சங்கம் (அய்மான்) என்ற சேவை அமைப்பை உருவாக்கிய முன்னோடிகளில் முதன்மையானவர்.

அய்மான் சங்கம் வெளியிட்ட பேராசிரியர் திருவை அப்துல் ரஹ்மான் அவர்களது கனீர் குரலில் திருக்குர்ஆன் தமிழாக்கம் ஒலிநாடா தயாரிப்பு பணியில் முதுகொழும்பாக செயல்பட்டவர் அப்துல் வஹ்ஹாப் அவர்கள்.

திருச்சியில் அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படுவதற்கும் பெரும் பங்கு ஆற்றியவர்.

எப்போதும் சமுதாய சிந்தனையில் செயல்பட்டவர். தமுமுகவிற்கு எப்போதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருபவர்.

முதுமையின் காரணமாக உடல் நலிவுற்று இருந்தாலும் சமுதாய கவலைகளை இன்றைய சந்திப்பின் போது துடிப்புடன் வெளிப்படுத்தினார்.

அல்லாஹ் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்க பிரார்த்திப்போம்.

பேராசிரியர் அவர்களுடைய அன்பிற்கு நன்றி!

✍️ அய்மான் சங்கம், அபுதாபி

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top