Home / GENERAL / அபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி!

அபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி!

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டு திரும்பிய ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 20/10/2019 ஞாயிறு மாலை இஷா தொழுகை முடிந்தவுடன் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க துணைத் தலைவர் முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியின் துவக்கமாக மெளலவி உபைதுற்றஹ்மான் மிஸ்பாஹி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்கள்

அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்புறை நிகழ்த்தினார்.

அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது பைத்துல் மாலின் பணிகள் பற்றி உறையாற்றினார்.

கத்தாரிலிருந்து வந்திருந்த கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் மூத்த தலைவர் ஹாஜி O.A. ஷபீர் அஹமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறையாற்றினார்.

அய்மான் சங்கத்தின் முன்னாள் செயலாளர் தீன் இசை தென்றல் தமிழ்மாமணி தேரிழத்தூர் ஏ.எஸ் தாஜ்தீன் ஃபைஜி இஸ்லாமிய இன்னிசை கீதம் பாடினார்.

புனித மிக்க கஃபா சென்று இறைவனின் அத்தாட்சிகளை கண்ணுற்று ஹஜ்ஜை நிறைவேற்றி வருகை புரிந்த ஹாஜிகள் அனைவருக்காவும் ஹஜ்ஜின் பாக்கியங்களை பகிர்ந்துக்கொண்டு மார்க்கத் துறை செயலாளர் மெளலவி SMB ஹுஸைன் மக்கி மஹ்லரி அவர்கள் சிறப்புறையாற்றினார்.
மெளலவி ஹாஜி முஹம்மது முஸ்தபா ஆலிம்,ஹாஜி ஷஃபீக் அஹமது, ஹாஜி முஹம்மது ரியாஸ் ஆகியோர் சார்பில் ஹாஜி முஹம்மது ரியாஸ் ஏற்புரையாற்றினார்.

அய்மான் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா நன்றியுறை நிகழ்த்தினார்.
அய்மான் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாளர் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைப் பொருளாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்,சமூக நலப் பணிகள் செயலாளர் மன்னார்குடி பிர்தோஸ் பாஷா, விழாக் குழு செயலாளர் காயல் லெப்பைத் தம்பி ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

இறுதியாக மெளலவி முஹம்மது முஸ்தபா ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அய்மான் சங்கம் – அபுதாபி

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top