Home / Uncategorized / அபுதாபியிலிருந்து அய்மானின் தனி விமானம் புறப்பட்டு சென்றது…

அபுதாபியிலிருந்து அய்மானின் தனி விமானம் புறப்பட்டு சென்றது…

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்.!
ஆம்.!
அய்மான் சங்கம் செய்யும்.!

-அய்மான் மகளிர் கல்லூரி
-அய்மான் பைத்துல்மால்
-திருக்குர்ஆன் அய்மான் மென்பொருள்
-சுனாமி பேரிடர் நிவாரணம்
-குஜராத் கலவர நிவாரணம்
-அசாம் கலவர நிவாரணம்
-டெல்லி கலவர நிவாரணம்
-கேரளா வெள்ளப் பெருக்கு நிவாரணம்
-சென்னை வெள்ளப் பெருக்கு நிவாரணம்
-தஞ்சை கண்டியூர் தீ விபத்து நிவாரணம்
-கொரோனா பேரிடர் நிவாரணம்

என சமூகப் பணிகளின் வரிசையில் இதோ புதியதோர் சரித்திர சாதனையாக…

எண்ணிலடங்கா சமூகப் பணிகளின் தொடர்ச்சியாக…

இதோ! அய்மானின் தனி விமானம் புறப்பட்டு சென்றடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.!

அமீரகத் தலைநகர் அபுதாபியில் இருந்து தமிழ் நாட்டிற்கு முதல் விமானம் என்பதிலும் அய்மான் சங்கம் முத்திரை பதித்து விட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த தனி விமானம் இயக்குவதற்கு தங்களது முழு உழைப்பையும் வழங்கிய அன்பு நிர்வாகிகள்,

தமிழக அரசு சார்ந்த சில பணிகளை விரைந்து முடிக்க அவ்வப்போது கேட்டுக்கொண்ட பொழுதெல்லாம் அதற்கு உடனடியாக செவிசாய்த்து முடித்துத் தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் சாஹிப் MLA அவர்களுக்கும்,

எங்களுடைய வேண்டுகோளை ஏற்று நள்ளிரவு என்றும் பாராமல் நாங்கள் அனுப்பும் அனைத்து வேண்டுகோள்களுக்கும் உடனடி பதில் வழங்கி,தேவைகள் நிறைவேற துணை நின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சாஹிப் MP அவர்களுக்கும்,

அமீரகத்தில் இந்திய தூதரகத்தினுடைய முதன்மை செயலாளர் திருமிகு.ராஜ் முருகன், சமூக நலத்துறை அலுவலர் சகோதரி பூஜா ஆகியோருக்கும்,

எங்கள் பணிகளை அவ்வப்போது கேட்டறிந்து நமது விமானப் பயண சேவையை துரிதமாக இயக்குவதற்கு நமது நிர்வாகிகளினுடைய ஆலோசனையை போன்றே தானும் முன்வந்து அவ்வப்போது நடப்புகள் என்னவென்று கேட்டு தெரிந்து,எங்களுக்கு ஆர்வமும் உற்சாகமும் ஊட்டிய தமிழ் மக்கள் மன்ற தலைவர் அன்பு சகோதரர் சிவகுமார்,

விமான கட்டணங்களை சேகரிக்க வேண்டும் என முடிவு செய்த போது நம் கண் முன்னால் வந்து நின்றது, அபுதாபியில் தலை சிறந்த முன்னணி தமிழ் வியாபார நிறுவனமாக விளங்கக் கூடிய ராயல் சில்க்ஸ்.
அவர்களிடத்திலே நமது வேண்டுகோளை வைக்க முக மலர்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் பயணிகளினுடைய விவரங்கள்,பயண கட்டணங்களை சேகரிப்பதில் அல்லும் பகலும் ஈடுபட்டு உழைத்திருக்கிறார்கள்.

ராயல் சில்க்ஸ் உரிமையாளர்களான ஜனாப்.மொய்தீன், ஜனாப்.அஜ்மீர்
ஆகியோருக்கு அய்மானின் அகமகிழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.!

இதற்கு பின்னணியில் இருந்து ஊக்கப்படுத்திய சமூக ஆர்வலர்கள் சமுதாய பிரமுகர்கள் அமீரகத்தினுடைய அனைத்து தமிழ் அமைப்பின் சகோதரர்கள்,மீடியா நண்பர்கள் வழங்கிய உற்சாகத்திற்கும்,அவர்களுடைய நல் ஆலோசனைகளுக்கும் எங்கள் இதயமார்ந்த நன்றி.!

தானும் இயங்கி,எங்களையும் இயக்கி பணியாற்றிய அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை.ஷாஹுல் ஹிமீத்,
மக்கள் தொடர்பு மற்றும் நிதி விவகாரங்களை சிறப்புடன் கையாண்ட

-ஜமால் அண்ணன்
-அப்பாஸ் மிஸ்பாஹி
-MAK காதர்
-நிஜாம்
-தோஷிபா சாதிக்

அலுவல் சார்ந்த பணிகளுக்கு அய்மான் குழுவினரோடு இணைந்து பணியாற்றிய

-மெளலவி ஹுஸைன் மக்கி
-அதிரை.மாலிக்
-தேவிப்பட்டிணம் ஹாஜா முபீன் ஆகியோருக்கும் எமது அகமகிழ் நன்றி.!

தாயகம் சென்றடைந்த பயணிகளை கொட்டும் மழையில் வரவேற்று சேவை செய்து கொண்டிருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், msf மாநிலப் பொதுச் செயலாளர் அன்சர் அலி, இளைஞரணி அமைப்பாளர் அமீருத்தீன், ஹுமாயூன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள்!

ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா!


About aiman_admin

Comments are closed.

Scroll To Top