LATEST AIMAN NEWS
Home / GENERAL / அய்மானின் ஆகாயப் பணி மேலும் உயரட்டும்..

அய்மானின் ஆகாயப் பணி மேலும் உயரட்டும்..

அமீரகத் தலைநகர் அபுதாபியில் மக்கள் பணியாற்றும்
அய்மான் சங்கம் தனது 40 வது ஆண்டு தொடக்கத்தில் மக்களுக்கு பயனுள்ள சேவைகளை செய்துள்ளது.

உளத்தூய்மையுடன் தொடங்கப்பட்ட அய்மான் சங்கம் அதனுடைய வெற்றிப்பாதையில் தொடர்ந்து பயனித்து கொண்டிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் தமிழர்களின் எந்த அமைப்பும் தொடங்கப்படாத காலத்தில் அய்மான் சங்கம் அன்று அமீரக அரசு அறிவித்த பொதுமன்னிப்பை பயன்படுத்தி விசா கிடைக்காமல் இருந்தவர்கள், விசா முடிந்தவர்கள், பாஸ்போர்ட் பிரச்சினைகளில் இருந்தவர்கள் இவர்களை முறையாக அரசு அனுமதியோடு தாயகம் அனுப்ப உதவிய தனிச்சிறப்பு அய்மான் சங்கத்திற்கு உண்டு அக்காலங்களில் அப்பணிகளின் மூலம் மக்களின் பேரன்பை சங்கம் பெற்றது.

மகத்தான பணியான அல்லாஹ்வின் அருள் மறை குர்ஆனை தமிழ் மொழியில் ஒலிபரப்பிய பணியிலிருந்து தொடங்கி அய்மான் மகளிர் கல்லூரி தொடங்கியது, அய்மான் பைத்துல்மால் தொடங்கியது, ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செய்த சேவைகள், ஏழை மாணவச் செல்வங்களுக்கு கல்வி உதவி தொகைகள் வழங்கிய பணி, வேலை வாய்ப்புகளுக்காக உதவியது, அனைவரின் நலன்கருதி மனிதாபிமானப் பணிகளை தொடர்ந்து செய்வது போன்ற சேவைகளை செய்து வந்த சங்கம் தற்பொழுது மிகக் கடுமையான சூழ்நிலைகளில் சிரமங்கள் பாராது அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு மக்களை அனுப்பும் விமான சேவை செய்துள்ளது.

இதன் மூலம் மக்களின் பெரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர் இன்றைய அய்மான் சங்க நிர்வாகிகளும் அதன் களப்பணியாளர்களும்.

காதிமுல் மஸாஜித் அல்ஹாஜ் J.ஷம்சுத்தீன் சாஹிப் அவர்களின் தலைமையில் ஒற்றுமையுடன் செயலாற்றும் ஆற்றல்மிகு நிர்வாகிகளை
சங்கம் பெற்றிருப்பது ஓர் தனிசிறப்பாகும்.

சங்கத்துக்கு அடித்தளமிட்ட அன்றைய முன்னோடிகள் இந்த மகத்தான சேவைகளை காணுகின்ற போது நிச்சயமாக அவர்களுடைய உள்ளம் பூரிப்படையும் அவர்களுக்காக அவர்கள் துஆச் செய்வார்கள்.

1981ல் அய்மான் சங்கத்தின் ஸ்தாபகப் பணியில் பங்காற்றியதன் காரணமாகவும் அதன் மூலம் பல அறப்பணிகளை செய்து 30 ஆண்டுகள் அபுதாபியில் அய்மான் சங்க பணிகளில் தொண்டாற்றியதில் அய்மானின் கல்விப்பணியின் தொடரில் 20 ஆண்டுகளாக அய்மான் மகளிர் கல்லூரியின் மூலம் தொடர்ந்து சேவையாற்றுவதில் மனநிறைவு பெற்றவன் என்ற அடிப்படையில் இந்த நிர்வாகிகளை பாராட்டுவதில் மகிழ்வடைகிறேன்.

சிரமான சூழலில் பலரின் சிரமங்களை போக்கக்கூடிய வகையில் சிரமம் பாராது சேவைகளை ஏற்ற சீர்மிகு சேவையாளர்களாகவே
சங்க நிர்வாகிகளை காணுகிறேன்.

இவர்கள் அய்மான் சங்க வரலாற்றில் நீங்கா இடம் பெறுவார்கள்.

வல்ல அல்லாஹ் நிர்வாகிகள், அதன் களப்பணியினர், துணை நின்றவர்கள் யாவரின் கரங்களை பலப்படுத்தி அவர்களின் பணிகளை இலகுவாக்கி பயனுள்ள சேவைகளைத் தொடர்ந்து செய்ய அருள் பாலிப்பானாக. ஆமீன்

  • காஜி டாக்டர் A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கீ
    டவுன் காஜி, கீழக்கரை.
    (முன்னாள் தலைவர், அய்மான் சங்கம்)

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top