Home / GENERAL / அரசாங்கங்கள் செய்ய மறந்ததை அய்மான்சங்கம் செய்கிறது!

அரசாங்கங்கள் செய்ய மறந்ததை அய்மான்சங்கம் செய்கிறது!

அபுதாபி அய்மான் சங்கத்தின் நாற்பத்தியொரு ஆண்டு கால சரித்திரத்தில் அய்மான் நிர்வாகிகள், கடிகாரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு, இப்படி ஓடியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

அதிலும், தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு உதவும் பணியில், அய்மான் நிர்வாகிகள், தொடர்ச்சியாக வாரக் கணக்கில் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

சரியான தூக்கமில்லாமல்…
தம் சொந்த அலுவலக வேலைகள் பாதிக்கப்பட்டு…
சரியாக சாப்பிடாமல்…
ஓயாத தொலைபேசி அழைப்புகளை ஏற்று…
டிக்கட் கன்பர்மேஷன்…
கேன்சலேஷன்…
ராயல் சில்க்ஸ் சகோதரர்கள்,
தூதரக வேலைகள்,
இண்டிகோ ஏர்லைன்ஸ்,
கணக்கு வழக்குகள்,
கொரோனா டெஸ்ட் என்று
அப்பப்பா……..

ஆடியோடி இந்த மேரத்தான் ஓட்டத்தின் நிறைவாக, அய்மானின் இரண்டாவது விமானம் இன்று அமீரகத் தலைநகர் அபுதாபியிலிருந்து 166 தமிழர்களைச் சுமந்து கொண்டு இதோ திருச்சிராப் பள்ளி புறப்பட்டு விட்டது !

அல்ஹம்துலில்லாஹ்….

இந்த நற்பணிக்காகத் தம்மை அர்ப்பணித்து வெற்றிகரமாக அய்மானின் இரண்டாம் விமானத்தைப் பறக்க விட்ட மக்கட் பணியாளர்களை குறிப்பிட்டேயாக வேண்டும்

*அதிரை ஏ. ஷாஹூல் ஹமீது (தலைவர், அய்மான் பைத்துல் மால், முன்னாள் தலைவர், அய்மான் சங்கம்)

  • கீழை ஜமாலுத்தீன்
    (துணைத் தலைவர்)
  • லால்பேட்டை எஸ்.அப்துர் ரஹ்மான் ரப்பானி
    (பொதுச் செயலாளர்)

*லால்பேட்டை அப்பாஸ் மிஸ்பாஹி (பொருளாளர்)

*சென்னை நிஜாம் மொகிதீன்,
(செயலாளர்)

*MAK முகமது அப்துல் காதிர்
(செயலாளர்)

*பசுபதிகோயில் சாதிக்
(செயலாளர்)

*மௌலவி ஹாபிஸ் ஹுசைன் மக்கி (மார்க்கத்துறைச் செயலாளர்)

*அபுதாபி ராயல் சில்க்ஸ் நிர்வாதிகள் சகோதரர்கள் மொகிதீன்,
மற்றும் அஜ்மீர்,

*தேவிபட்டினம் ஹாஜா முபீனுத்தீன்

&
திருச்சியில் முஸ்லிம் யூத் லீக்கின் ஆற்றல் மிக நிர்வாகிகளான சகோதரர்கள்,

*கே.எம்.கே ஹபீபுர் ரஹ்மான்,
*ஏ.எம்.எச். அன்சர் அலி,
*பி.எச். ஹுமாயூன்

ஆகிய பாடுபட்டு உழைத்த நிர்வாகிகளை பயணிகள் நன்றியுணர்வுடன் நினைத்துப் பார்ப்பார்கள்.

அய்மான் சரித்திரம் அவர்தம் பெயர்களை பொன்னெழுத்துக்களால் பொறிக்கும்.

எவ்வளவு ஆபத்தான நோய்த்தொற்றுக்
காலம்…..

அதை எல்லாம் பொருட்படுத்தாமல், தாயகம் திரும்ப முடியாமல் தவித்த தமிழர் தம்மை, உமது கடின உழைப்பால், அவர் குடும்பங்களோடு கொண்டு சேர்த்த நீவிர் யாவரும் வாழ்க ! வாழ்க பல்லாண்டு!!

அய்மானின் இன்னொரு மகத்தான மக்கட் சேவை என்ன வெனில், அய்மானின் முதல் விமானத்தில் பயணம் செய்த சில தொழிலாளர்களால், பயணத் தொகையான திர்ஹம் ஆயிரத்து எண்ணூறை முழுமையாச் செலுத்த முடியாமற் போனதால், அந்தச் சில லட்சம் ரூபாய்களை அய்மான் நிர்வாகமே பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டது என்பதாகும் .

அய்மானின் சேவை பொன் விழா, வைர விழா, பவழ விழா காண பிரார்த்திப்போம்.

வாழ்க அய்மான் சங்கம்!

  • எஸ்.ஏ. சி ஹமீது
    மேனாள் பொதுச் செயலாளர்

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top