அபுதாபி அய்மான் சங்க தொடக்ககால ஸ்தாபகர்களில் ஒருவரும் அமீரத்திற்கு 1963 தமிழகத்திலிருந்து வருகை தந்த முதலாமானவர் பெரியவர் அல்ஹாஜ் முஹம்மது ஷபிபாய் அவர்கள் (வயது 86) இன்று அவரது சொந்த ஊராகிய வாலாஜாபேட்டையில் பகல் 12 மணி அளவில் வபாத் ஆனார்கள்.
ஷஃபி பாய் அவர்கள் அய்மான் சங்கத்தின் முதல் மக்கள் தொடர்பு செயலாளராகவும் பணியாற்றியவர் அவருடைய புதல்வர் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றிய ஹாஜி முஹம்மது அல்தாப் ஆவார்.
அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை மன்னித்து சுவனபதியில் நல்லடியார்களின் சேர்த்து அருள்புரிவானாக.
— அய்மான் முன்னாள் தலைவர் : காஜி A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன்