29/09/2020
தலைவர் மர்ஹூம் ஷம்சுத்தீன் ஸாஹிப் அவர்களுடன் அய்மான் சங்கம் தொடங்கப்பட்ட 1981 ஆண்டு முதல் அவர் சங்க உதவிப் பொருளாளராக பொறுப்பேற்று பின்னர் உதவி தலைவராக, தலைவராக, கல்லூரி தலைவராக தேர்வு செய்யப்பட்ட எல்லா அமர்விலிருந்தும் அவருடன்
இறுதிவரை பணியாற்றி அவரது தூய தோழமையை பெறச்செய்தான் அல்லாஹ்.
அபுதாபி அய்மான் சங்க மற்றும் அய்மான் கல்லூரி பணிகளில் இணைந்து சேவையாற்றி உள்ளத்தால் நேசித்த உற்ற சகோதரராக தோழராக தேர்ந்த ஆலோசகராக தூய உணர்வு மிக்க சேவையாளராக மென்மையான உறுதிமிக்க மேன்மை குணம் கொண்ட தலைவர் அவர்.
அய்மானின் எண்ணற்ற சாதனைகளில் பிரதான பங்கேற்ற தலைவர் அவர். கல்லூரி நிர்மாணப் பணி போன்ற எல்லா பணிகளிலும் தனது சுமூகமான அணுகுமுறை மூலம் வெற்றி கண்டவர்.
பல நூறு இறையில்லங்கள் அமைவதற்கு காரணமாக இருந்து அதன் மூலம் சமுதாய மக்களின் துஆவைப் பெற்றவர்.
அவருடன் அமீரகத்திலும் தாயகத்திலும் பயணித்த பயணங்களும் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் தருணங்களும் மகத்தான தருணங்களாகும்.
அவர் தலைமையில் அவருடன் பொதுச்செயலாளர், துணைத்தலைவர் போன்ற பல நிர்வாக பணியில் அவரது இறுதி காலம் வரை சேர்ந்து களப்பணியாற்றிட அரும் வாய்ப்புகளை அல்லாஹ் எனக்கு அளித்து மருத்துவமனையிலும் அவருடன் கடைசியாக நேரில் பேசும் (25.09.2020) வாய்ப்பும் கிடைக்கச் செய்தான்.
அத்தூய தோழமையின் பிரதிபலிப்பு அவரது ஜனாஸா தொழுகையை நடத்திவைக்க அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில் தொழுகையை முன்னின்று நடத்தினேன்.
மார்க்கத்தின் கதிரவன் என்ற கருத்துடைய ‘ஷம்சுத்தீன்’ எனும் பெயருக்கேற்ப பிரகாசமாகவே வாழ்ந்தார்.
வல்ல அல்லாஹ் அவரை பொருந்திக் கொண்டு, அவரது குடும்பத்தார்களுக்கும் அய்மான் அங்கங்களுக்கும்
‘ஸப்ரன் ஜமீல்’ அழகிய பொறுமையை தந்தருள்வானாக. அவரது சேவைகளைப் பொருந்திக்கொண்டு அவருக்குப் சுவனபதி வழங்கி அருள்பாலிப்பானாக. ஆமீன்
-காஜி A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி
டவுன் காஜி, கீழக்கரை.
முன்னாள் தலைவர், அய்மான் சங்கம்.
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், அய்மான் மகளிர் கல்லூரி, திருச்சி.