Home / GENERAL / சுபஹான் இரங்கல் செய்தி

சுபஹான் இரங்கல் செய்தி

இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி_ராஜிவூன் ….
களமருதூர் ஜெ. சம்சுதீன் அவர்கள்

42 ஆண்டுகள் பழக்கம் 16 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் இவர் கூடவே வேலை பார்த்தேன்யாரிடமும் இம்மியளவும் கடும் சொல் சொல்லாதவர் என்னோடும் என் குடும்பத்தார் அனைவருடனும் மிகுந்த பாசத்துடன் பழகியவர் என் பிள்ளைகளுக்கு எல்லாம் சம்சுதீன் அப்பா என் மாமாவுக்கு சம்சுதீன் மாமா

எந்த ஒரு நிகழ்ச்சி ஆனாலும் முதலில் அழைப்பு வரும் ஆயிரம் பேர் கூடியிருக்கும் கூட்டம் ஆனாலும் சரி அவர்களுக்கு மத்தியில் என்னை அழைத்தது “பச்சா “என்றுதானே

ஐம்பது வயதைக் கடந்த நான் என்றுமே உங்களுக்கு “பச்சா”தான்.உங்களின் மறைவு செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன் வாரம் ஒரு முறையாவது போன் செய்து ஏன் சுபான் இந்தப்பக்கம் உன்னை காணலையே வா என்று அழைப்பீர்கள் இனி அந்த அழைப்பை நான் எப்படி கேட்பேன்

உங்களுடன் பணிபுரிந்த காலங்களில் எல்லா வேலைகளையும் தந்து இதை நீ செய் என்று அத்தனை துறையின் அனுபவத்தை எனக்கு பெற்று தந்தீர்கள் அந்த 16 வருடங்கள் என்னை சரிக்கு சமமாக நடத்தினீர்கள்.

அந்த கம்பெனியை விட்டு வெளியே வந்து வேறொரு கம்பெனியில் பணிக்கு சேர்ந்த போது அந்த கம்பெனியின் மேலாளரை சந்திக்கும்போது நீங்கள் சொன்ன அந்த வார்த்தை இன்னும் என் நினைவில் இருக்கின்றது “சுபானை நீங்கள் வேலைக்கு வைக்கவில்லை ஒரு மதிக்க முடியா சொத்தை வாங்கி இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்” என்கிறது யார் சொல்லுவார் இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை.

என்னுடைய வாழ்வில் எத்தனையோ முன்னேற்றத்திற்கு நீங்கள் காரணியாக இருந்து இருக்கிறீர்கள் உங்கள் கம்பெனியில் பணிபுரியும் நபர்கள் கூட சொல்லுவார்கள் என்னங்க எதுக்கெடுத்தாலும் உங்களையே எடுத்துக்காட்டாக சொல்லி எங்களை வேலை வாங்குகிறார் என்று ,சமூக சிந்தனையாளராக பல அரும் பணிகளை செய்து இருக்கிறீர்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது மகள் திருமணத்தில் பங்கேற்ற வந்து சிறப்பித்து அங்கிருந்து நேரடியாக ஏர்போர்ட் சென்று அபுதாபி புறப்பட்டுச் சென்றீர்கள் . நான் ஊர் திரும்பப் போகிறேன் எனச் சொல்லி நீங்கள் வருவதை தட்டிக்கழித்து இருக்கலாம் அப்படிப்பட்ட மனசு உங்களுக்கில்லை .

தானத்தையும், சமாதானத்தையும் விரும்பி செயல்படுத்தும் இனியவர்,

என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை,எப்படி இந்தநாளை கடந்து போக போகிறேன் என்பது புரியவில்லை .அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் நற்பதவியைக் கொடுக்க துவா செய்த வண்ணமாக…..

யாரஹ்மான், யாரஹிம்
இவரை நீ மன்னிப்பாயாக!
நரக வேதனையிலிருந்தும், கப்ருடைய வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக.
இவர்களை நீ சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக.
சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் எனும் சொர்க்கத்தை வழங்குவாயாக.
இவர்கள் விட்டுச் சென்றவர்களுக்கு
நீ பொறுப்பாளனாவாயாக!
இவரை பிரிந்து வாடும்
அன்பு குடும்பத்தாருக்கும்,
அருமை நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும்,
மிக அழகிய பொறுமையை தந்தருள்வாயாக.
“ஹலக்கல் மொவ்த்த
வல் ஹயாத்த”
முஸ்லீம்களின் உண்மையான வாழ்க்கை மரணத்துக்குப் பின்னர்தான் தொடங்குகிறது,
அந்த வாழ்வில் அவரை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பாயாக.
ஆமீன். ஆமீன்.
யா ரப்பில் ஆலமீன்.

சுபஹான்

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top