Home / GENERAL / பேரா. ஜவாஹிருல்லாவின் இரங்கல் செய்தி.

பேரா. ஜவாஹிருல்லாவின் இரங்கல் செய்தி.

அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவரும் திருச்சி அய்மான் மகளிர் கல்லூரியின் தலைவருமான கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூர் சம்சுதீன் ஹாஜியார் அவர்கள் இன்று மரணமடைந்த செய்தி பெரும் துயரத்தை அளித்தது. அவருக்கு வயது 72.

நீண்ட நெடிய காலம் சமுதாய சேவைகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். தமிழகத்தில் பல நூறு இறை இல்லங்கள் கட்டப்படுவதற்கு வழி வகுத்தவர். இன்முகத்துடன் பழகுபவர். அவரது மரணம் சமுதாயத்திற்கு மிகப் பெரும் இழப்பாகும்.

எல்லாம் வல்ல இறைவன் அவரது நற்செயல்களை அங்கீகரித்து உயர்ந்த சுவனம் வழங்கப் பிரார்த்தனை செய்கிறேன்.அவரை இழந்து வாடும் அவரது மகன் எஸ் ஹாரூன் ரஷீது (கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுகவின் செயற்குழு உறுப்பினர்) அவரது அண்ணன் மகன் அஸ்ரப் (கள்ளக்குறிச்சி மாவட்ட தமுமுகவின் செயற்குழு உறுப்பினர்) அவரது தம்பி மகன் அப்துல் ரஹீம் (மாவட்ட துணைச் செயலாளர்) மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இறைவன் அழகிய பொறுமையை வழங்கப் பிரார்த்தனை செய்கிறேன்.

– பேராசிரியர் ஜவாஹிருல்லா
தலைவர் – மனித நேய மக்கள் கட்சி

(இணைப்பு: வந்தவாசி பெரிய பள்ளிவாசல் திறப்பு விழாவின் போது எடுத்த படம். இப்படத்தில் வலப்புறத்தில் இரண்டாவதாக இருப்பவர்)

About aiman_admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top