Home / GENERAL / மறைந்த தலைவருக்கு அபுதாபி காயல் நலமன்றம் இரங்கல்

மறைந்த தலைவருக்கு அபுதாபி காயல் நலமன்றம் இரங்கல்

அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவரும் திருச்சி அய்மான் மகளிர் கல்லூரியின் தலைவருமான களமருதூர் சம்சுதீன் ஹாஜியார் அவர்கள் மரணமடைந்த செய்தி பெரும் துயரத்தை அளித்தது.

நீண்ட நெடிய காலம் சமுதாய சேவைகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டவர். தமிழகத்தில் பல நூறு இறை இல்லங்கள் கட்டப்படுவதற்கு வழி வகுத்தவர். இன்முகத்துடன் பழகுபவர். அவரது மரணம் சமுதாயத்திற்கு மிகப் பெரும் இழப்பாகும்.

எங்கள் அபுதாபி காயல் நலமன்றத்தின் பொதுக்குழுவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு எம் காயல் மக்கள் மீது அளவற்ற பாசத்தோடு பழகி சிறந்த முன்னோடியாக திகழ்ந்தவர்.
எல்லாம் வல்ல இறைவன் அவரது நற்செயல்களை அங்கீகரித்து உயர்ந்த சுவனம் வழங்கப் பிரார்த்தனை செய்கிறோம்.

அவரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அய்மான் சங்க நிர்வாகிகளுக்கும் இறைவன் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக.
ஆமீன்

தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
அபுதாபி காயல் நலமன்றம்.

About aiman_admin

Comments are closed.

Scroll To Top