அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு..

6

3அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு..

அபுதாபியில் அய்மான் சங்கம் ஏற்பாடு செய்த ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி 21/09/2017 வியாழக்கிழமை மாலை 7:30 மணிக்கு இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார்.

நாகூர் ஹாபிழ் இத்ரீஸ் மரைக்காயர் திருக்குர்ஆன் வசனங்கள் ஒதினார்.

அய்மான் சங்க செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ வரவேற்றுப் பேசினார்.

மெளலவி,ஹாபிழ் அப்துல் மஜீத் நூரானி துவக்கவுரை நிகழ்த்தினார்.

பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிறுவன அதிபர் ஹாஜி.அப்துல் ஹமீத் மரைக்காயர், துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீத் யாசின், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் நிர்வாக செயலாளர் அப்துர் ரஹ்மான் தங்ஙள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அய்மான் சங்கத்தின் சமீபத்திய பணிகளை விளக்கி அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல்SAC ஹமீது உரையாற்றினார்.

பன்னூல் ஆசிரியர் மெளலவி பாஷா ரஷாதி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மெளலவி பாஷா ரஷாதி அவர்கள் எழுதிய “மாநபி (ஸல்) அவர்களின் மாபெரும் மாண்பு” என்கிற நூலை அய்மான் சங்கத் தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி வெளியிட அய்மான் சங்க பொருளாளர் கீழை.ஜமாலுத்தீன், அய்மான் சங்க ஷார்ஜா பிரதிநிதி ஜனாப்.தீபி, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் பொதுச் செயலாளர் சிராஜுல் அமீன், அமீரக தமிழ் மன்ற நிர்வாகி பிர்தவ்ஸ் பாஷா, விருத்தாசலம் ஷாஹுல் ஹமீத்,அய்யம்பேட்டை ஜாபர் அலி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியை அய்மான் சங்க துணைப் பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தொகுத்து வழங்கினார்.

இறுதியாக அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி நன்றி கூற பெரியப்பட்டிணம் மெளலவி ஷர்ஃபுத்தீன் மன்பஈ துஆவுடன் நிறைவடைந்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க நிர்வாகிகளான லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, பூந்தை ஹாஜா மைதீன், பசுபதி கோவில் சாதிக் பாட்ஷா, ஆடுதுறை அப்துல் காதர், காயல் ஷேக் ஹமீது, லெப்பை தம்பி, லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15 16 17 18 19 20 21 22

WhatsApp Image 2017-09-21 at 20.17.58

அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.

Payment Details

Payment Details

அய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால் சார்பில்   வழங்கப்பட இருக்கும் உதவித் தொகைக்கான காசோலையை அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹூல் ஹமீத் அவர்கள் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் Ex MP அவர்களிடம் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் இன்று 05/08/2017 நேரில் வழங்கினார்.

காயல் நலச்சங்கம் இஃப்தார் நிகழ்வில் அய்மான் தலைவர் கவுரவிக்கப்பட்டார்.

1C

1B

அபுதாபியில் சகோதர அமைப்பான அபுதாபி காயல் நலச் சங்கம் வியாழனன்று நடத்திய இஃப்தார்  நிகழ்வில் அமீரக தாய்ச் சபை அய்மான் சங்கத்தின் கண்ணியமிகு தலைவர் கனிமொழிக் கவிஞர் J ஷம்சுதீன் ஹாஜியார் கவுரவிக்கப்படுகிறார்.

உடன் அபுதாபி KWAவின் கவுரவத் தலைவர் அல்ஹாஜ் இம்தியாஸ் அஹமது மற்றும் KWAவின் தலைவரும் அய்மான் சங்கத்தின் துணைத் தலைவருமான அல்ஹாஜ் VST ஷேக்னா லெப்பை மற்றும் KWA பொதுச் செயலாளர் அல்ஹாஜ் MM மக்பூல் அஹ்மது ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் பாராட்டு தெரிவித்தது அய்மான் நிர்வாகக் குழு

1B

1Eதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் மற்றும் குழுவினருக்கு பாராட்டுதெரிவித்து அய்மான் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்.

அய்மான் சங்கத்தின் 416 வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று 03/07/2017 திங்கள் மாலை அபுதாபியில் நடைபெற்றது.

நமது தாய்த்திரு நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தாயகத்தில் செயல்பட்டு வரும் அய்மான் பைத்துல் மால் சேவைகளை விரிவுபடுத்தி பணிகளை மேலும் முடுக்கி விடுவதென முடிவு செய்யப்பட்டது.

பொருளாதார தேவையுடைய பைத்துல் மால் அமைப்புகள் சென்னையில் உள்ள அய்மான் பைத்துல் மால் அலுவலகத்தில் நிர்வாகிகளை அணுகலாம்.

எடிட்டர் அலாவுத்தீன் தயாரிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் அய்மான் ஆவணப் படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு அபுதாபியில் இறுதிக்கட்ட படப்பிடிப்போடு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும் என்கிற தகவலை பூந்தை ஹாஜா தெரிவித்தார்.

1Cதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாருக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கும், அவர் குழுவினருக்கும் அய்மான் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அமீரகம் வர அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் பாராட்டு விழா நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு அதை அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில், எஸ்.ஏ.சி.ஹமீது, லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி, காயல் உமர் அன்சாரி, கொள்ளுமேடு ஹாரிஸ் மன்பஈ, லால்பேட்டை அப்பாஸ் மிஸ்பாஹி , பசுபதிகோவில் சாதிக் பாட்சா, பூந்தை ஹாஜா, செயற்குழு உறுப்பினர்கள் மன்னார்குடி பிர்தவ்ஸ் பாஷா மற்றும் லால்பேட்டை இஸ்மாயில், காயல் ஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அய்மான் பைத்துல் மால் சார்பாக உதவிகள் வழங்கப்பட்டன

1f

இறைவனருளால் தொடரும் நமது அய்மான் பைத்துல்மாலின் மக்கள் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கடலூர் மாவட்டம் கொள்ளுமேடு மற்றும் கந்தகுமாரன் பகுதிகளில் அய்மான் பைத்துல் மால் சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது.  அந்நிகழ்ச்சியில்  அய்மான் நிர்வாகிகள் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி கொள்ளுமேடு ஹாரிஸ் மன்பயீ மற்றும்லால்பேட்டை சல்மான் ஃபாரிஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

1B 1C 1D 1E 1f

 

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் கலந்தாய்வு கூட்டம் ; ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு.

1B
அபுதாபி: அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் சமுதாய கலந்தாய்வு கூட்டம் அபுதாபி செட்டி நாடு உணவகத்தில் 18-6-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை அய்மான் சங்க பொருளாளர் கீழை ஜமாலுதீன் தலைமையில் நடைப்பெற்றது.
அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை சாகுல் ஹமீது நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.  அய்மான் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் அருள் மறை திருக்குர்ஆனின் வேத வரிகளை ஒதி துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மவ்லானா மவ்லவி காயல் எஸ்.எம்.பி.ஹூசைன் மக்கி மஹ்லரி, ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மவ்லானா மவ்லவி ஏ.முஹம்மது ரிழா பாக்கவி ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.

எழுத்தாளரும் ஊடகவியாளருமான ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.

அய்மான் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஹாரிஸ் மன்பஈ நன்றி கூறினார்.

மவுலவி முஹம்மது பாஷா ரஷாதி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் வந்திருந்தோருக்கு, நூற்றுக் கணக்கான இஸ்லாமிய நூல்கள் அய்மானின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் நிர்வாகிகள் அதிரை ஷாஹுல் ஹமீது, காயல் அன்சாரி, லால்பேட்டை அப்பாஸ் மிஸ்பாஹி , கீழை அல்லா பக்ஷ், சாதிக், முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சங்கைமிகு உலமாக்கள் , அனைத்து இயக்க நிர்வாகிகள், பல்வேறு ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

அய்மான் நிர்வாகிகள் முஹம்மது அன்சாரி, முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி , அல்லா பக்ஷ், ஆடுதுறை அப்துல் காதர், பசுபதிகோவில் சாதிக், காயல் ஷேக் ஆகியோர் இஃப்தார் மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நிழற்பட ஒருங்கிணைப்பு : நன்றி , கேமரா கவிஞர் காயல் சுபுஹான் பீர் முஹம்மது

Image may contain: 4 people, people sitting and indoor
Image may contain: 3 people, people smiling, people standing and indoor
Image may contain: 4 people, people smiling, people standing, beard and indoor
Image may contain: 4 people, people standing, beard and indoor
Image may contain: 5 people
1B 1C 1D

அய்மான் பைத்துல் மால் பணிகளுக்கு நிதி வழங்கிடுவீர்…

1B

அன்பான சமுதாய சொந்தங்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி

பல்வேறு நிலைகளில் சமுதாய, சமூகப் பணிகளில் அர்ப்பணித்து பணியாற்றி 37-ம் ஆண்டை நோக்கிப் பயணிக்கும் அய்மான் சங்கத்தின் கருவறையில் உருவான “அய்மான் பைத்துல் மால்” தமிழகம் தழுவிய அளவில் வட்டியில்லா கடன் வழங்கும் அழகியப் பணியை மேற்கொண்டு வருவது தாங்கள் அறிந்ததே!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வட்டியில்லா கடன் சேவையின் தேவை அதிகரித்து காணப்படுகிறது.

கடன் வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்திட மேலதிக நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.

தங்களின் ஜகாத், ஸதகா தொகையினை நம்முடைய அய்மான் பைத்துல் அமைப்புக்கு வழங்கி அல்லாஹ்வின் அருளைப் பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

1C

தங்களின் ஜகாத், ஸதகா தொகை அனுப்ப வேண்டிய முகவரி:

Aiman Charitable Trust
Bank: ICICI BANK
A/c no: 602005120929
Branch: Chennai main, IFSC code: ICIC0006020

தொடர்புக்கு: +919003033139 / +919790441792

அமீரக வாழ் நண்பர்கள் தங்களின் ஜகாத், ஸதகா தொகையினை கீழ்காணும் நமது நிர்வாகிகளின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வழங்கலாம்.

0506212569  /  0555447709  /  0502821852  / 0503104871  / 0509228580

அழகிய கடனை அல்லாஹ்விற்காக வழங்குவோம்…
அவனின் திருவருளில் என்றும் திளைத்திருப்போம்…

அய்மான் சங்கம்.

அபுதாபி.

கவிக்கோ அப்துல் ரஹ்மான் மறைவுக்கு அய்மான் சங்கம் இரங்கல்.

1B

1Cகவிதை உலகின் அணிகலன் கவிக்கோ மறைந்தார்…

அய்மான் சங்கம் இரங்கல்.

 

தமிழ் உலகம் ஏற்றிப் போற்றிய கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் இறைவனின் நாட்டப்படி இன்று 02/06/2017 அதிகாலை வஃபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக திறம்பட செயலாற்றி பெருமை சேர்த்தவர்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தை உருவாக்க அரும்பாடுபட்டவர். பல்வேறு இலக்கிய மாநாடுகளை நடத்திக் காட்டிய தமிழ் கவிஞர்.

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய விழாக்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அருமையான, ஆழமான உரைகளை நிகழ்த்தியவர் இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

வல்ல இறைவன் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களை பொருத்திக் கொள்வானாக..
அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அய்மான் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தாயகத்திலிருந்து வருகை புரிந்த தாய்ச்சபை தலைவர்களுக்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு.

1B

1gஅமீரக காயிதே மில்லத் பேரவை 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா & காயிதே மில்லத்தாய் வாழும் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் , மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் ஆகியோருக்கு அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் உள்ள லஜீஜ் உணவகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அய்மான் சங்க தலைவர் களமருதூர் சம்சுதீன் ஹாஜியார் அய்மான் சங்க பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீது , பொருளாளர் கீழை ஜமால் முஹம்மது , ஷார்ஜா அய்மான் நிர்வாகி தீபி ஹாஜி மற்றும் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

1B 1C  1E 1f

அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான், பொருளாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி , துணை பொதுச்செயலாளர் பரகத் அலி , அபுதாபி மண்டல செயலாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, மக்கள் தொடர்பு செயலாளர் முஹம்மது ஹாரிஸ், அமைப்பு செயலாளர் ஆவை.அன்சாரி,
ஊடகத்துறை செயலாளர் சல்மான் ஃபாரீஸ், மின்னணு ஊடகத்துறை செயலாளர் சலீம், செயற்குழு உறுப்பினர்கள் பூந்தை ஹாஜா, பசுபதி கோவில் சாதிக், அபுதாபி தமிழ் சங்க தலைவர் திரு.ரெஜிணால்ட், ஏர் இந்தியா மேனஜர் டாக்டர் திரு. நவீன் குமார், மற்றும் அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

அய்மா1Dன் சங்க செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்.

1 2 3