திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தின விழா..

1k

அபுதாபி அய்மான் சங்கம் கருவறையில் உருவான திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16-வது ஆண்டு தின விழா இன்று 25/03/2017 சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை கல்லூரி ஆடிட்டோரியத்தில் சிறப்புடன் நடந்தேறியது.

தாய்ச் சபையின் தமிழக பொதுச் செயலாளர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் KAM முஹம்மது அபூபக்கர் MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி மாணவிகளுக்கு பரிசளிக்கும் வாய்ப்பளித்து, அய்மான் சங்கத்தின் பிரதிநிதியாக இந்த எளியவனை அங்கீகரித்து அழகு பார்க்கும் அய்மான் நிர்வாக பெருமக்களுக்கும், கல்லூரியின் ஆட்சி மன்றக் குழுவினருக்கும் என் இதயமார்ந்த நன்றி…!

ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி.

1B 1C 1D  1f 1g 1i 1j 1k

உத்தமத் திருநபி (ஸல்) உதய தின விழா கருத்தரங்கம்!

2l

2mபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

உத்தமத் திருநபி (ஸல்) உதய தின விழா கருத்தரங்கம்!

நாள்: 24/02/2017 வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணி முதல்
இடம்: செட்டிநாடு உணவக அரங்கம்
எலக்ட்ரா / எல்ட்ரோடா பின்புறம் அபுதாபி.

தலைமை:
களமருதூர் அல்ஹாஜ் J.ஷம்சுத்தீன்
(தலைவர்,அய்மான் சங்கம் அபுதாபி & அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சி)

சிறப்புரை: மெளலவி ஹாஃபிஸ் SMB ஹுசைன் மக்கி மஹ்ழரி அவர்கள்
(மார்க்கத்துறை செயலாளர்-அய்மான் சங்கம்)
தலைப்பு:”எல்லோர்க்கும் சொந்தம் எங்கள் நாயகம்”

அய்மான் வெள்ளி விழா முழக்கம்  ஏழைகளை நேசிப்போம்!

அபுதாபியில் நேற்று அய்மான் சங்கம் நடத்திய “எல்லோர்க்கும் சொந்தம் எங்கள் நாயகம்” மீலாதுன்னபி கருத்தரங்கத்திலிருந்து சில காட்சிகள்

நன்றி ‍கேமரா கவிஞர் காயல் சுபுஹான்

2l 2k 2j 2i 2h 2g 2f 2e 2b 2a 1r 1q 1m 1l 1E 1D 1C 1B 1A

அய்மான் சங்கத்தின் இயூமுலீ தலைவர் E அஹமது சாஹிப் MP மறைவுக்கு இரங்கல் செய்தி

1B

1Aஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் குரலாக ஒலித்தவருமான அல்ஹாஜ் E அஹமது சாஹிப் MP அவர்ககளது திடீர் மறைவு ஒட்டுமொத்த இந்திய சமுகத்திற்கும் பேரிழப்பாகும். . (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ’ன்)

– மத்திய அமைச்சராக பத்து ஆண்டுகள் செயல்பட்டு, தன் திறமையால் பல அண்டை நாடுகளோடு சுமூகமான உறவை ஏற்படுத்திய சாதனையாளர்
– ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக திறம்பட செயல்பட்ட  ஆளுமை
– 5 முறைகேரள சட்டமன்ற உறுப்பினராகவும், 7 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் நேசத்திற்குரிய தலைவர்

அன்னாரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்
அவரது மறைவிற்கு அய்மான் சங்கம் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் பதிவு செய்கிறோம்.

மாபெரும் தலைவரை இழந்து வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத் தோழர்களுக்கு, அஹமது சாஹிபு அவர்தம் அன்பு குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் சலாத்தினையும் தெரிவிக்கின்றோம்.

எல்லாம் வல்ல இறைவன் மறைந்த தலைவர் அவர்களை பொருந்திக் கொள்வானாக. அன்னாருக்கு உயர் சுவர்க்கப் பதியை அருள்வானாக! ஆமீன்

J ஷம்சுதீன்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
அய்மான் சங்கம்
அபுதாபி

அய்மான் முன்னாள் தலைவர் கீழை செய்யது ஜாஃபர் விடை பெற்றார்

2f

2hகடந்த 38 வருடங்களாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டவரும், அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவராகவும் ஏனைய முக்கிய பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றியவருமான கீழை செய்யது ஜாஃபர் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அமீரகத்திலிருந்து விடை பெற்றார்.

அவரை பாராட்டி வழியனுப்பும் முகமாக அய்மான் சங்கம் வழியனுப்பு மற்றும் நன்றி தெரிவித்தல் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.

உணர்ச்சிப்பூர்வமாக நடந்த வழியனுப்பு நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் செய்யது ஜாஃபர் அவர்களது சேவையை நினைவு கூர்ந்தனர்.

மவ்லவி ஷர்தீபுன் மன்பயீ திருக்குர்ஆன் வசனங்கள் ஓதி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்புரையாற்றினார்.அப்போது செய்யது ஜாஃபருடனான தனது 17 ஆண்டுகால உறைவையும் அவரது சேவை மனப்பான்மையையும் நினைவுகூர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து லால்பேட்டை ஜமாஅத் தலைவர் யாசர் அரஃபாத், காயிதேமில்லத் பேரவை ஆவை அன்சாரி, மர்ஹபா நலச் சங்க நிர்வாகி ரஃபி அஹமது, காயல் நலச் சங்க நிர்வாகி ஏ.ஆர். ரிஃபாயி, கீழக்கரை ப‌ஹருத்தீன் ஆகியோர் செய்யது ஜாஃபரின் சேவையை நினைவு கூர்ந்து பேசினர்.

அய்மானின் நீண்ட வரலாற்றில் அவருடன் வெகு காலம் இணைந்து பணியாற்றிய அய்மான் கல்லூரியின் துணைத்தலைவர் முதுகுளத்தூர் ஹஸன் அஹமது, கல்லூரி செய‌லாளர் ஹபீபுல்லா ஆகியோர், செய்யது ஜாஃபர் அவர்களது அதீத திறமைகளையும், சேவை மனப்பான்மையையும், பிறருக்கு உதவும் அன்புள்ளத்தையும் விவரித்து பேசினர்.

மவ்லவி காயல் எஸ்.எம்.பி ஹுசைன் மக்கி, செய்யது ஜாஃபர் தன் மீது பொழிந்த அன்பினை நினைவுகூர்ந்து, அவருடைய குடும்பத்தில் தானும் ஒருவராகிப் போனதாகக் கூறினார்.

அய்மான் தலைவர் கனிமொழிக்கவிஞர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் பேசும் போது தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவருக்கிருந்த புலமையை போற்றினார். செய்யது ஜாஃபர் மிகக் கடினமான உழைப்பாளி. கல்விச் செல்வம் எங்கிருந்தாலும் தேடிச் சென்று தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் கல்வியாளர் என்று பாராட்டினார்.

நிகழ்ச்சியின் மகுடமாக, தான்சானிய அமீரக சங்க தலைவர் அஹமது முபாரக் கலந்து கொண்டு செய்யது ஜாஃபர் தன்னை வழிநடத்திய‌ குரு என்று குறிப்பிட்டார்.

அய்மான் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன், துணைத் தலைவர் காயல் வீ.எஸ்டீ. ஷேக்னா, துணைப் பொதுச்செயலாளர் லால்பேட்டை அப்துர் ரஹ்மான் ரப்பானி, ஆடிட்டர் அப்துல்லா, காயல் அன்சாரி, தவ்சீப் ரஹ்மத்துல்லா, லால்பேட்டை அப்பாஸ், கொள்ளுமேடு ஹாரிஸ், ஆடுதுறை அப்துல் காதர், கீழை அல்லாபக்ஷ், கீழை தவ்ஃபீக், தோஷிபா சாதிக், ஆகியோரும் நிகழ்ச்சியில் செய்யது ஜாஃபர் அவர்களை பாராட்டி பேசினர்.

இறுதியாக செய்யது ஜாஃபர் ஏற்புரை ஆற்றினார். அப்போது தன்னை ஆளாக்கிய தன் தாயை நினைவு கூர்ந்தார். இன்றைய இளைஞர்கள் தங்களின் த்னிப்பட்ட திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டுமென அறிவுறுத்தினார். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அய்மானை வளர்க்க இளைஞர்கள் முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்தார். அய்மான் சங்கம் கியாமத் நாள் வரை மக்கள் பணியாற்ற வேண்டுன்பதே தன்னுடைய பிரார்த்தனை என்று கூறி அனைருக்கும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியை லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி தொகுத்து வழங்கினார்.

லால்பேட்டை சல்மான் நன்றியுரை ஆற்றினார்.

2i 2h 2g 2f 2e 2b 2a 1r 1q 1m 1l 1E 1D 1C 1B 1A

 

மனநிறைவைத் தந்த மாமறை திருக்குர்ஆன் மஜ்லிஸ்

1A

மனநிறைவைத் தந்த மாமறை திருக்குர்ஆன் மஜ்லிஸ்

அய்மான் சங்கத்தின் சார்பாக தர்த்தீல் திலாவத்தல் குர்ஆன் மஜ்லிஸ் இறையருளால் இன்று அபுதாபியில் சிறப்புடன் துவங்கியது.

அய்மான் பொதுசெயலாளர் இல்லத்தில் துவக்கப்பட்ட இந்த முபாரக்கான மஜ்லிசை அபுதாபி தமிழ்ச்சமூகத்தின் தலை சிறந்த காரியான சகோ. ஹாபிழ் இத்ரீஸ் மரைக்காயர் தனது இனிமையான கிராஅத் மூலம் துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க‌ பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீத் தனது துவக்கவுரையில் திருக்குர்ஆன் திலாவத்தின் நன்மைகளை எடுத்துக்காட்டி பேசினார்.

அய்மான் மூத்த நிர்வாகி பண்டாரவடை நஜீமுல்லா திருக்குரானை தஜ்வீத் முறையில் எவ்வாறு ஓதுவது என்பதனை மிக‌ அருமையாக விளக்கினார். பங்கெடுத்த சகோதரர்கள் தஜ்வீத் வகுப்பின் நேரத்தை அதிகரிக்க கோரிக்கை முன் வைத்தனர்.

தொட‌ர்ந்து கலந்து கொண்ட‌ அனைவரும் திருக்குர் ஆன் ஓதினர்.

நிறைவாக, மவ்லவி எஸ்.எம்.பி ஹுசைன் மக்கி மஹ்ழரி திருக்குர் ஆனின் மகிமையை ஹதீதுகளின் ஆதாரத்தோடு விளக்கிப் பேசினார். அய்மானின் இந்த முயற்சி பல்கிப் பெருகுவதோடு, திருக் குர் ஆன் ஓதத் தெரியாதவர்களையும் மனதிற்கொண்டு, திருக்குர் ஆன் வகுப்புக்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்ற தன் அவாவை முன் வைத்தார்.

அய்மான் துணைப் பொதுச்செயலாளர் லால்பேட்டை மவ்லவி ஏ.எஸ்.அப்துர் ரஹ்மான் ரப்பானி தன் நன்றியுரையின் போது, நமது மார்க்க சேவைகளில் அருள்மறை திருக்குர் ஆனுக்கு ஆற்றும் சேவைக்கு இணையாக எதுவும் இல்லை என்றும் பிரிந்து கிடக்கும் சமுதயத்தை ஒன்று சேர்க்கும் வல்லமை இது போன்ற குர் ஆன் மஜ்லிசிற்கு நிச்சயம் உண்டு என்பதை எடுத்துக் கூறினார்.

மாண்புயர் திருக்குர் ஆன் மஜ்லிசை நடத்தும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக அடுத்த அமர்வு அய்மான் பொருளாளர் கீழை ஜமால் அவர்கள் இல்லத்தில் வைத்து அடுத்த திங்கள் இரவு (16/01/2017) நடைபெறும் அன்று அறிவிக்கப்பட்டது

ஜல்லிக்கட்டு போராட்டம்: அபுதாபி அய்மான் சங்கம் முழு ஆதரவு

11

10ஜல்லிக்கட்டு போராட்டம்: அபுதாபி அய்மான் சங்கம் முழு ஆதரவு

அபுதாபியில் நேற்று நடந்த அய்மான் சங்க நிக‌ழ்ச்சியில், தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது வாசித்து மக்கள் முன் முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தில் உலகின் மிகப் பழமையான கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். அவ்வாறான தமிழர்களின் காலாச்சாரத்தை கட்டிக் காக்க போராடும் வீரமும் அர்ப்பணிப்பும் மிக்க நம் இளைஞர்களை பாராட்டுவதோடு, அவர்களின் போராட்டம் வெற்றி பெற உறுதுணையாக நிற்போம் என்று கூறப்பட்டிருத்தது.

அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் பலத்த ஆரவாரத்துடன் தங்கள் ஏகோபித்த ஆதரவினை தெரிவித்து தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.

இந்த கூட்டத்தில், அய்மான் சங்கத் தலைவர் ஜே.ஷம்சுதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் லால்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை, மேலதிருப்பந்துருத்தி ஆகிய ஊர் ஜமாஅத்தின் நிவாகிகளும், பாரதி நட்புக்காக மைப்பின் நிர்வாகி கலீல் ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியினை அய்மான் துணைப் பொதுச்செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். லால்பேட்டை சல்மான் ந‌ன்றி கூறினார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் அமைப்பில் அபுதாபி அய்மான் சங்கமே ஜல்லிக்கட்டுக்காக தாயகத்தில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக முதல் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி ஆட்சி மன்றக் குழுவினர் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு வரவேற்ப்பு.

2n

1qதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி ஆட்சி மன்றக் குழுவினர் மற்றும் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு வரவேற்ப்பு.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி ஆட்சி மன்றக் குழுவினர் மற்றும் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி 26/12/2016 திங்கள் மாலை அபுதாபி செட்டிநாடு உணவக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜி தலைமை வகித்தார்.

ஷேக் ஷாஹுல் ஹமீது இறைமறை வசனங்கள் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் SAC ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.

அபுதாபி இந்தியன் ஸ்கூல் முதல்வர் பேராசிரியர் ஷேக் அலாவுத்தீன்,
பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிறுவன அதிபர் அல்ஹாஜ் அப்துல் ஹமீது மரைக்காயர்,
திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் செயலாளர் கீழை செய்யது ஜாஃபர்,அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் SKS ஹமீதுர் ரஹ்மான்,
ஹாஜி ஹஸன் அஹமது, தமுமுக நிர்வாகி ஷேக் தாவூத், அபுல் ஹஸன், அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் இஸ்ஹாக் ஆகியோர் அணிந்துரை வழங்கினர்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் Dr.ஹாஜா நஜ்முத்தீன், துணைச் செயலாளர் J.ஜமால் முஹம்மது, ஜமால் முஹம்மது கல்லூரி முதல்வர் Dr.S. முஹம்மது சாலிஹ், துணை முதல்வர் முனைவர்.இஸ்மாயில் மொஹிதீன்,சுயநிதி கல்வி இயக்குநர் நிஹால், சமுதாயப் புரவலர் நோபிள் மரைன் நிர்வாக இயக்குநர் ஷாஹுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பாரம்பரிய வழிவந்தவருமான இளம் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிறைவுறையாற்றி
அய்மான் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணி என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி நம் மனங்களை வென்றார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

அய்மான் சங்க துணைப் பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் நிர்வாகிகள் கீழை ஜமாலுத்தீன், காயல் VST ஷேக்னா,ஷர்புத்தீன் அல்லாஹ் பக்ஷ் ஆகியோர் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

இறுதியாக செயற்குழு உறுப்பினர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் நன்றி கூற துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

1A 1B 1C 1D 1E 1l 1m 1q 1r 2a 2b 2c 2e 2f 2g 2h 2i 2j 2k 2l 2m 2n 2o

விடை பெற்றார் அய்மான் தலைவர் அல்ஹாஜ் அதிரை ஷாஹுல் ஹமீது

1E

1Aவிடை பெற்றார் அய்மான் தலைவர் அல்ஹாஜ் அதிரை ஷாஹுல் ஹமீது .

அமீரகத்தின் தாய்ச் சபை அய்மான் சங்கத்தின் புதிய தலைவராக ‘கனிமொழிக் கவிஞர் ” களமருதூர் J ஷம்சுதீன் ஹாஜியார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சகோதர அமைப்புகள் வாழ்த்து!!

அமீரகத்தின் மிகப் பழமையான அமைப்பு அய்மான் சங்கத்தின் தலைவர் அதிரை A ஷாஹுல் ஹமீது இன்று விடை பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைவராக களமருதூர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அய்மானின் மூத்த நிர்வாகியும் முன்னாள் தலைவருமான கீழை செய்யது ஜாஃபர் ஷம்சுதீன் ஹாஜியார் பெயரை முன் மொழிய, சங்கத்தின் பொதுச் செயலாளர் காயல் SAC ஹமீத் அதனை வழி மொழிந்தார்.

அபுதாபி அரப் உடுப்பி அரங்கத்தில் வைத்து நடந்த எளிய விழாவில் அய்மான் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி அதிரை ஷாஹுல் ஹமீது அவர்களின் சேவைகளை நினைவு கூர்ந்தார்.

அய்மான் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் அவர்களின் உரையை தொடர்ந்து, சகோதர அமைப்புகளான அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் சாம்சன், தமுமுக மண்டலச் செயலாளர் ஷேக் தாவூது, அபுதாபி காயிதே மில்லத் பேரவை நிர்வாகி ஆவை அன்சாரி, லால்பேட்டை ஜமாஅத் தலைவர் யாசர் அரஃபாத், காயல்பட்டினம் ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மவுலவி ஹபீபுர் ரஹ்மான் மஹ்ளரி, ஐஎம்எஃப் செயலாளர் காதர்மீரான், எஸ் டீ பீ ஐ ஷபீக் மீரான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னாள் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீதுக்கு நினைவுப் பரிசை இந்நாள் தலைவர் ஷம்சுதீன் ஹாஜியார் வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் காயல் VST ஷேக்னா மற்றும் செயலாளர் கொள்ளுமேடு ஹாரிஸ் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

அதிரை கவியன்பன் கலாம் ஷாஹுல் ஹமீதின் சேவைகளை நினைவூட்டும் கவிதையினை வாசித்தார்.

திருச்சி ‘அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர்கள் மெளலவி ராஜ் முஹம்மது ஆலிம், மெளலவி முஹம்மது ஜலாலுத்தீன் ஆலிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மவுலவி ராஜ் முஹம்மது ஆலிம் சிறப்புரை வழங்கினார்.

லால்பேட்டை சல்மான் நன்றி கூறினார்.

அமீரகத்தின் மூத்த உலமாவும், அரபி அறிஞருமான மவ்லவி பாஷா ரஷாதியின் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி ஹமீது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

காயல் அன்சாரி, கீழை அல்லா பக்ஷ், லால்பேட்டை இஸ்மாயில், ஆடுதுறை முஹம்மது அப்துல் காதிர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

2g1A1B1C1D1E1l1m1q1r2a2b2c2e2f

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்தும் தமிழ் நெஞ்சங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

1i

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்தும் தமிழ் நெஞ்சங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி 1 டிசம்பர் 2016 அன்று கலீபா பார்க்கில் நடைபெற்றது.

நமது அய்மான் சங்கம் நடத்திய அமீரக தேசிய நாள் நிகழ்ச்சியில் ‘ஜெட் ஏர்வேஸ்’
விமான நிறுவனம் வழங்கிய சிறப்பு பரிசான விமான டிக்கெட்டை (அபுதாபி – சென்னை – அபுதாபி)வென்றவர் சகோ.மதுக்கூர் அப்துல்லா.

” ஜெட் ஏர்வேஸ் ” அதிகாரி திரு. வர்கீஸ் அவர்கள் பரிசினை வழங்கிட அதனை பெற்றுக்கொள்கிறார் அப்துல்லா அவர்களது மகள். உடன் அய்மான் நிர்வாகிகள்.

வாழ்த்துக்கள்!

1A

***********************************************************

நமது அமீரக தேசிய நாள் நிகழ்ச்சியில் பெண்களுக்கான தங்க நாணயத்தை தட்டிக் சென்றவர் சிறுமி முத்து ஆமினா யஹ்யா.

பரிசினை வழங்குபவர் ‘அல் அஹாலியா’ மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயா ஷாஹுல் MD DGO அவர்கள்

வாழ்த்துக்கள்!!

1A

***********************************************************

1A 1B 1C

1D 1E 1f  1j 1k 1l 1m 1n 1o 1p 1q 1r 1s 1t 1u 1v 1w 1x 1y 1z 2a

1A 1B 1C 1D 1E 1f 1i 1j 1k 1l 1m 1n 1o 1p 1q

*அபுதாபியில் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி நிர்வாகக்குழு _ அய்மான் சங்கம் வரவேற்பு!*

1q

1gஅமீரகத் தலைநகர் அபுதாபி வந்த டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி தாளாளர் வி.எம். ஜபருல்லா கான், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜெ.அபுபக்கர் சித்திக், ஏ.எஸ். நசீர் கான், முதல்வர் திருமங்கலம் முனைவர் அப்பாஸ் மந்திரி, பேராசிரியர்கள் நாகர்கோவில் முனைவர் இப்ராஹிம், முதுகுளத்தூர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோருக்கு அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தங்கம் மாத இதழ் ஆசிரியர் மைதீன் அவர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

செட்டிநாடு உணவக அரங்கில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத்தின் மூத்த தலைவர் ஜே ஷம்சுதீன் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார்.

துவக்க மாக திருக்குர்ஆனின் வேத வசங்னகளை காயல் ஷேக் ஹமீது ஒதி துவக்கி வைத்தார்.

பொதுச் செயலாளர் காயல் எஸ் ஏ சி ஹமீது அறிமுக உரையாற்றினார்.

துணைப் பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

வருகை தந்த கல்லூரி நிர்வாகிகளுக்கு அய்மான் செயலாளர்கள் காயல் அன்சாரி, லால்பேட்டை அப்பாஸ், கொள்ளுமேடு ஹாரிஸ், ஆடுதுறை அப்துல் காதர், செயற்குழு உறுப்பினர்கள் பேட்டை ஜாபர் மற்றும் பூந்தை ஹாஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் இப்ராஹிம் எழுதிய புத்தகம் அய்மான் பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் அவர்களால் வெளியிடப் பட்டது.

முதல் பிரதியை அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் செங்கோட்டை ரெஜினால்டு, ஈடிஏ மெல்கோ நிர்வாகி காதர் மொகிதீன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்.

வளைகுடா வாசகர்களின் நலன் கருதி குவைத்தில் இருந்து வெளிவரும் தங்கம் மாத இதழை அதன் ஆசிரியர் த.ஷேக் மைதீன் வெளியிட்டார்.

முத்தாய்ப்பாக கல்லூரியின் முன்னாள் மாணவர் முனைவர் முதுவை ஹசன் அஹமது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீரகத்தின் மூத்த செய்தியாளர் முதுவை ஹிதாயத்திற்கு அய்மான் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழை அல்லா பக்ஷ், லால்பேட்டை இஸ்மாயில், கீழை தவ்பீக் ஆகியோர் செய்திருந்தனர்.

இறுதியாக அய்மான் நிர்வாகி லால்பேட்டை சல்மான் நன்றி கூறினார்.

1A 1B 1C 1D 1E 1f 1g 1i 1j 1k 1l 1m 1n 1o 1p 1q 1r 1s 1t 1u 1v 1w 1x 1y 1z

1 2 3