ஹிஜ்ரி இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி

prof_semumu2

ஹிஜ்ரி இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் உள்ள Ruchi Restaurant Baunqet ஹாலில் நேற்றிரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன், பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் நாகூர் அப்துல் ஹமீத் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹாஃபிழ் முஹம்மது இத்ரீஸ் மரைக்காயர் இறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை அப்துல்ரஹ்மான் ரப்பானி வரவேற்புரையாற்ற, சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீத் நிகழ்ச்சியை பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.

அதிரை கவியன்பன் கலாம் சிறப்பு கவிதைகளை வாசித்தார்.

அய்மான் சங்கத்தின் கீழை சையது ஜாஃபர் திருச்சியில் இயங்கி வரும் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நடப்பறிக்கை நிகழ்த்த, ஹிஜ்ரா வரலாற்றை காயல் ஹுசைன் மக்கீ ஆலிம் மஹ்ழரி ஹள்ரத் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமானியும், சென்னையில் இயங்கி வரும் இக்ராஃ அகாடமியின் நிறுவனருமான கேப்டன் மத்தீன் ரப்பானி சிறப்புரையாற்றினார்.

எஸ் – ஐஏஎஸ் அகாடெமியின் செயல் இயக்குனரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியரும், முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளருமான பேராசிரியர், முனைவர் சேமுமு முஹம்மது அலி கல்வி- ஆட்சி அதிகாரம் ஆகியவற்றின் அவசியத்தை குறித்து விளக்கி நிறைவு பேருரையாற்றினார்.

அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ நன்றியுரை நிகழ்த்த, ஷர்ஃபுத்தீன் மன்பஈ அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத், இந்திய முஸ்லிம் பேரவை (IMF), அமீரக காயிதேமில்லத் பேரவை, மௌலிது கமிட்டி ஆகியவற்றின் நிர்வாகிகளும், பல்வேறு ஊர்களை சார்ந்த சகோதரர்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் சங்க நிர்வாகிகள் மற்றும் சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க நிர்வாகிகளான கீழை ஜமால், திருவாடுதுறை அன்சாரி பாட்ஷா, காயல் ஷேக்னா, காயல் அன்சாரி, களமருதூர் ஷர்ஃபுத்தீன், லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மன்பஈ, ஆடுதுறை அப்துல் காதர், நாகூர் ரஷீத் மரைக்காயர், லால்பேட்டை சல்மான், காயல் லெப்பை தம்பி, கீழை ஃபஹ்ருல் பையாஜ், லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.image1

image2.jpeg

image3

image4

image5

image6

prof_semumu3

prof_semumu4

prof_semumu5

அய்மான் பைபத்துல் மால் பணிகள் தாயகத்தில் தொடங்கியது.

அய்மான் பைபத்துல் மால் பணிகள் தாயகத்தில் தொடங்கியது.

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் துவக்கப்பட்டுள்ள அய்மான் பைத்துல் மால் முறைப்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு தனது சேவையை துவக்கியுள்ளது.

aiman-karaikudi

போதிய நிதியின்றி காரைக்குடியில் இயங்கி வரும் பைத்துல் மால் அமைப்புக்கு முதல் கட்டமாக அய்மான் பைத்துல் மாலில் இருந்து 1 வருட ஒப்பந்த அடிப்படையில்
வட்டியில்லா கடனாக ரூ. 1,00,000/- வழங்கப்பட்டது.

aiman-karaikudi-donate

மதுரை அருகில் உள்ள சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் குக்கிராமம் பள்ளிச் சந்தை.
ஆண்கள் லாரி ஓட்டுனர்களாகவும், விவசாயிகளாகவும்,
பெண்கள் தையல் தொழில் செய்யக் கூடியவர்களாகவும் உள்ள இம்மக்களுக்கு முதல் 2 மாதம் தொழில் ஏற்படுத்தவும், மூன்றாவது மாதத்தில் இருந்து கடனை திருப்பி கொடுக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வட்டியில்லா இவ்விரு கடன் ஒப்பந்தங்களும் அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

அல்ஹம்துலில்லாஹ்..

புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

Assalamu Alaikkum (WRWB)
Ramadan Kareem!
Insha Allah, Abu Dhabi Lailath-Ul-QADR Committee invites you for the LAILATH-UL-QADR Night Special Prayers and Bayaan Program (in TAMIL) on 24th JULY 2014, Thursday evening – Friday Night (27th Ramadan, 1435H) at 08:30 pm at Indian Islamic Centre – Ground Floor Main Auditorium in Abu Dhabi(intersection of Old Pass Port Road and Al Salam Street Corner – Near ADDC) The function will inshaa Allah start with the Isha prayer, followed by Tharaaveeh & Thasbeeh prayers and proceed with the Special Lecture in Tamil by Moulana Moulavi J. Jahir Hussain, Fazil Manbayee.
Professor, J.M.A. Arabic College Lalpet – Tamil Nadu.After the Special Lecture Dua Al Thawbah will be performed.
ending with Dua Al Barakha.

All are cordially invited to join with their family and get the blessings of Al Mighty Allah.
Note:
· Separate place for Ladies arranged.
· Suhoor Food (Take away packs) will be served for all after the function.
· For the People coming from MUSSAFAH, bus service has been arranged on 24/07/2014 Thursday evening at 8:00 pm from Mussafah ICAD Residential Camp Gate – 2.
(Contact: Mr. Abdul Jabbar 050-7911239; Haji Sharfudeen Alim 055-6413405);

o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o-

அன்புடையீர் , அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது அபுதாபி புனித லைலத்துல் கத்ர் கமிட்டி சார்பில்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்
24/07/2014 அன்று ஹிஜ்ரி 1435 ரமலான் பிறை 27,
வியாழன் மாலை வெள்ளி இரவு 8:30 மணியளவில்
மௌலவி அல்ஹாபிழ் ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரி
நடாத்தலில் புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் இஷா தொழுகை, தராவீஹ் மற்றும் தஸ்பீஹ் தொழுகைகளை தொடர்ந்து சிறப்பு பேருரை நடைபெறும்.

சிறப்பு பேருரை
மெளலானா மௌலவி J. ஐாஹிர் ஹூசைன் பாஷில் மன்பஈ
பேராசிரியர் J.M.A. அரபிக் கல்லூரி லால்பெட்.

After the Special Lecture Dua Al Thawbah will be performed.
Ending with Dua Al Barakha.

இடம் :
இந்தியன் இஸ்லாமிக் செண்டர் ஆடிட்டோரியம், பாஸ்போர்ட் ரோடு, அபுதாபி.
ஒன்றுக்கு பல ஆயிரம் தவாபு கிடைக்கும் புனித ரமலான் மாதத்தில் அனைவர்களும் குடும்பத்துடன் வந்து, கலந்து அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும், அருளையும்’ பெற அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு:
· பெண்களுக்கு தனியிட வசதி உண்டு,
· அனைவருக்கும் ஸஹர் உணவு (Take away Packs) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
· முஸஃப்பாவில் உள்ளவர்களுக்கு ICAD Residential Camp Gate – 2 வில் இருந்து இரவு 8 மணிக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
(Contact: Mr. Abdul Jabbar 050-7911239; Haji Sharfudeen Alim 055-6413405); .

For more information and clarification, please contact:
Mr. Sharbudeen Hajiar – 050-4103126
Mr. Mohideen Abdulcader – 050-4441861
Mr. Siddiq – 050-6723050
Mr. S.A.C. Hameed – 050-6212569
Mr. Abdul Rahman – 050-2821852
Mr. Aaawai Ansari – 050-5463510;
Mr.Abdul Jabbar – 050-7911239
Mr. Amanullah Khan – 050-2820363
Moulavi Habeeb Rahman Mahlari – 050-6174304
Mr. M. Shuaib Lalpet – 050-6671977
Mr. Khader Meeran – 050-5661493
Mr. Jubair – 050-1302961;
Mr. Lalpet Rafi – 050-9361895
Mr. Ashraf Ali Maraikayer – 050-7523058
Mr. Omer Ansari – 055-9100909;
Haji Sarbudeen Alim – 055-6413405
Mr. A. Shahul Hameed– 050-7824129;

அபுதாபி அய்மான் சங்கம் இஃப்தார் மற்றும் பத்ர் போர் நினைவு தினம்!

அபுதாபி அய்மான் சங்கம் இஃப்தார் மற்றும் பத்ர் போர் நினைவு தினம்!
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் செயல்படும் அய்மான் சங்கத்தின் சார்பில் இஃப்தார் விருந்து மற்றும் பத்ர் சஹாபாக்கள் நினைவு தின நிகழ்ச்சி சிறப்போடு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.
ஹாபிழ் முபாரக் அலவி இறைமறை வசங்கள் ஓதினார். அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியின் துவக்கவுரையை அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் பெரியபட்டினம் மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ நிகழ்த்தினார்.

பத்ர் போரின் நிகழ்வுகளையும் அதில் கலந்து கொண்ட நபித் தோழர்களின் தியாகங்களையும் விவரித்து லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மெளலவி ஜெ.ஜாக்கிர் ஹுஸைன் பாஜில் மன்பஈ சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் இறையச்சத்தின் அவசியத்தைப் பற்றியும் சமுதாயத்தில் தோன்றும் பிரச்சினைகளை எவ்வாறு கையாண்டு தீர்வு காண்பது என்பதை விளக்கியும் உரையாற்றினார்.

ஹாபிழ் மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி சிறப்பு துஆ ஓதினார்.

சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் விதத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மானுக்கு சமுதாயப் புரவலர் நோபிள் மரைன் ஷாஹுல் ஹமீத் அவர்களும்,லால்பேட்டை அரபிக் கல்லூரிப் பேராசிரியர் மெளலவி ஜாக்கிர் ஹுஸைன் பாஜில் மன்பஈ அவர்களுக்கு திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் செயலாளர் கீழை சையத் ஜாஃபர் அவர்களும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.
அய்மான் சங்கத்தின் சேவைகளான திருக் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆடியோ கேசட்,சிடி,அய்மான் மொபைல் குர்ஆன், அய்மான் மகளிர் கல்லூரியின் கல்விப் பணி,மக்கள் நலப் பணிகள் வரிசையில் மிக சமீபத்தில் உருவாகியிருக்கும் அய்மான் பைத்துல் மால் (அறக்கட்டளையில்) சேர்ந்து நன்மையடைய அனைவர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் விரைவில் 24 மணி நேரமும் இயங்கும் அய்மான் ரேடியோவில் திருக் குர்ஆன் ஒளிபரப்பு சேவைப் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் அபுதாபியில் செயல்பட்டு வரும் அமைப்புக்கள்,மற்றும் சமுதாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பல்வேறு ஊர் ஜமாஅத் அமைப்புக்களின் நிர்வாகிகள் சமுதாயப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது நிகழ்ச்சியை நெறிபடுத்தி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளான துணைத் தலைவர் திருவாடுதுறை அன்சாரி பாஷா,செயலாளர்கள் களமருதூர் ஷர்புத்தீன்,காயல்பட்டினம் முஹம்மது அன்சாரி,செயற்குழு உறுப்பினர்கள் காயல் ஷேக்னா லெப்பை,திருச்சி அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்சியில் அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் கீழ்க்காணும் கவிதையை வாசித்தார்கள்:

 ஆயிரம் எதிரிகள் அங்கேIMG-20140720-WA0023

…..ஆயுதம் அற்றவர் இங்கே
ஆயினும் இணங்கினர் அல்லாஹ்(வின்)
…ஆணையைத் தயக்கமும் இன்றி!

சொற்பமாய் இருப்பினும் வெற்றிச்
….சோபனம் தருவதே அல்லாஹ்(வின்)
அற்புதம் என்பதை அங்கே
…. அனைவரும் உணர்ந்திடச் செய்தான்!

வானவர்க் கூட்டமும் வந்து
…..வாளினால் வெட்டிட உதவ
ஆணவக் கூட்டமும் ஒழிந்து
…அக்களம் வென்றனர் காணீர்!

இச்சிறு கூட்டமும் வெற்றி
….இன்றியே அழியுமே யானால்
அச்சமாய் உன்னையும் அல்லாஹ்(என்று)
….அழைத்திட எவருமே உண்டோ”

நெற்றியைத் தரையினில் வைத்து
….நெகிழ்வுடன் நபிகளார்(ஸல்) வேண்ட
வெற்றியைத் தருவதை அல்லாஹ்
….வேகமாய் நிறைவுற செய்தான்!

தீனெனும் செடியினைக் காத்த
…தியாகிகள் இலையெனில் நாமும்
தீன்குல பிறப்பினில் இல்லை
…தியாகிகள் நினைவுகள் வேண்டும்

AIMAN Charitable Trust Invites Donors

Dear brothers / sisters,
Assalamu alaikum.
AIMAN Charitable Trust would like to invite you to contribute to the development of the fund for distributing through various Baithulmals in Tamil Nadu.  We  would like to invite you to provide your funds clearly specifying whether it is from your Zakath or Sadaqah or as Loan.  Based  on your provision, we shall use the funds for the specific purposes.  For those who are providing loans may specify your repayment date, so that we can arrange with the benefitors accordingly.

Kindly contact hmmjamaludeen@gmail.com for your contributions.
Wassalam.

1 2