அபுதாபி அய்மான் சங்கம்சார்பில் கல்வியாளர் சகோதரர் CMN சலீம் அவர்களுக்கு வரவேற்பு.

அஸ்ஸலாமு அழைக்கும் வராஹ்.
அபுதாபி அய்மான் சங்கம்சார்பில் சகோதரர் CMN சலீம் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி.
அமீரகம் வருகை புரிந்துள்ள கல்வியாளர் சகோதரர் CMN சலீம் அவர்களுக்கு இன்று (13-03-2016) மாலை அபுதாபி செட்டிநாடு உணவக அரங்கத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

188 189

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை மௌலவி முஹம்மது அப்பாஸ் மன்பஈ இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சங்கப் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் அனைவரையும் வரவேற்று அறிமுகவுரை நிகழ்த்தினார்.

சங்கத்தின் துணைச் செயலாளர் காயல் ஷேக்னா, அதிரை கவியன்பன் கலாம், அதிரை அப்துல் மாலிக், மௌலவி ஹிதாயதுல்லாஹ் நூரி, அபுல்ஹசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கல்வியாளர் CMN சலீம் அய்மான் சங்கத்தின் பணிகளை பாராட்டியும், தனக்கு அளிக்கப்ட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் கீழை ஜமால், துணைத் தலைவர் திருவாடுதுறை அன்சாரி, செயற்குழு உறுப்பினர்களான காயல் அன்சாரி, கொள்ளுமேடு மௌலவி முஹம்மது அப்பாஸ், ஆடுதுறை அப்துல் காதர், லால்பேட்டை சல்மான், காயல் லெப்பை தம்பி, அதிரை தௌசீஃப் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

அய்மான் சங்கம் நடத்திய உத்தம திருநபியின் உதயதின விழா.

logo

அய்மான் சங்கம் 28-01-2016 அன்று நடத்திய உத்தம திருநபியின் உதயதின விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பங்கேற்பு

அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் உள்ள இந்தியன் இஸ்லாமிக் சென்டர் ஆடிட்டோரியத்தில் உத்தம திருநபியின் உதயதின விழா 28-01-2016 அன்று நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் கலந்துக்கொண்டு பேருரை நிகழ்த்தினார்.

விழாவிற்கு அய்மான் சங்க தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.

மாணவர் அஹ்மத் நசீம் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைக்க, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதிரை கவியன்பன் கலாம் கவிதை வாசித்தார்.

சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல்ரஹ்மான் ரப்பானி அறிமுக உரையாற்றினார்.
12651070_1039817992724023_5583250158253902229_n 12418023_1039817956057360_7954207456285024455_naiman_milad 12654670_1039818722723950_4751947383718890690_n

அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார், அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அய்மான் கல்லூரியின் முன்னாள் செயலாளர் கீழை சைய்யது ஜாஃபர் “அய்மானின் நினைவலைகள்; ஓர் மீள் பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நபிகளாரின் சிறப்புக்களை பற்றி அய்மான் சங்க மார்க்கத்துறை முதன்மைச் செயலாளர் காயல் மௌலவி ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி ஹழ்ரத் சிறப்புரையாற்றினார்.

இந்திய யூனியன் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்சனைகள் குறித்தும், அதை எதிர்கொள்ள நம்மை நாம் தயார்படுத்திக்கொள்வது குறித்தும், முஹல்லா ஜமாஅத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியும், மீலாது நபி விழாக்களை கொண்டாட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி பேருரையாற்றினார்.

விழாவில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா, பொருளாளர் கீழை எஸ்.கே.எஸ். ஹமீதுர்ரஹ்மான், சார்ஜா மண்டல செயலாளர் தஞ்சை பாட்ஷா கனி, தஞ்சை வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் ஹாஜி முஹம்மது, எழுத்தாளர் வி.களத்தூர் கமால் பாட்ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.

நூல் வெளியீடு

எழுத்தாளர் வி.களத்தூர் கமால் பாட்ஷா எழுதிய “ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம் ” என்ற நூலை பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வெளியிட முதல் பிரதியை இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் அப்துல் காதர், இரண்டாம் பிரதியை இந்திய சமூக மைய உறுப்பினர் ஃபிர்தௌஸ் பாஷா, மூன்றாம் பிரதியை அமீரக தொழிலதிபர் லால்பேட்டை சிராஜுத்தீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை சல்மான் பாரிஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

மௌலவி ஷர்ஃபுத்தீன் ஹழ்ரத்தின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

விழாவில் இந்திய முஸ்லிம் பேரவை, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத், மௌலிது கமிட்டி, அமீரக காயிதேமில்லத் பேரவை, காயல் நல மன்றம், மர்ஹபா வெல்ஃபேர் அசோசியேஷன், துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள், சமுதாய பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

ஜனவரி 28 ஆம் தேதி மாலை அய்மான் சங்கத்தின் மாபெரும் மீலாது நபி பெருவிழா.

12400576_953153588067687_270987396318076768_n

அஸ்ஸலாமு அழைக்கும் வராஹ்.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 28 ஆம் தேதி மாலை அய்மான் சங்கத்தின் மாபெரும் மீலாது நபி பெருவிழா.

சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அனைவரும் தவறாமல் வருகைதருமாறு அய்மான்  சங்கத்தின் நிர்வாகிகள் கேட்டுகொள்கிறார்கள்.
12400576_953153588067687_270987396318076768_n

44 வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அய்மான் சங்கமம் நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அழைக்கும் வராஹ்.

இன்று 03/12/2015 அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் 44 வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அய்மான் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

12342818_1006145802757909_6658316849970869341_n12346379_1006162399422916_1769640923706008638_n

12289528_1006347716071051_7382956225712110384_n12316415_1006346906071132_496866014384884788_n

நிகழ்வில் சிறுவர் ,சிறுமியர்,ஆண்கள், பெண்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் மருத்துவ பரிசோதனை, சிறியோர் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளும், பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.

விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு தங்க காசு,மொபைல் போன்கள்,வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதியும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமிருந்து பெறப்பட்டது.

மருத்துவ பரிசோதனையையும், புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த விளக்கத்தையும் காயல். டாக்டர் சையத் அஹமது சிறப்புற வழங்கினார்.

ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்கள்,சகோதர சமுதாயத்தைச் சார்ந்த சகோதரர்கள் என பலரும் பங்கேற்றனர்.

அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியை மிக சிறப்புடன் ஒருங்கிைணைத்திருந்தனர்.