காயல் நலச்சங்கம் இஃப்தார் நிகழ்வில் அய்மான் தலைவர் கவுரவிக்கப்பட்டார்.

1C

1B

அபுதாபியில் சகோதர அமைப்பான அபுதாபி காயல் நலச் சங்கம் வியாழனன்று நடத்திய இஃப்தார்  நிகழ்வில் அமீரக தாய்ச் சபை அய்மான் சங்கத்தின் கண்ணியமிகு தலைவர் கனிமொழிக் கவிஞர் J ஷம்சுதீன் ஹாஜியார் கவுரவிக்கப்படுகிறார்.

உடன் அபுதாபி KWAவின் கவுரவத் தலைவர் அல்ஹாஜ் இம்தியாஸ் அஹமது மற்றும் KWAவின் தலைவரும் அய்மான் சங்கத்தின் துணைத் தலைவருமான அல்ஹாஜ் VST ஷேக்னா லெப்பை மற்றும் KWA பொதுச் செயலாளர் அல்ஹாஜ் MM மக்பூல் அஹ்மது ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கவிக்கோ அப்துல் ரஹ்மான் மறைவுக்கு அய்மான் சங்கம் இரங்கல்.

1B

1Cகவிதை உலகின் அணிகலன் கவிக்கோ மறைந்தார்…

அய்மான் சங்கம் இரங்கல்.

 

தமிழ் உலகம் ஏற்றிப் போற்றிய கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் இறைவனின் நாட்டப்படி இன்று 02/06/2017 அதிகாலை வஃபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக திறம்பட செயலாற்றி பெருமை சேர்த்தவர்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தை உருவாக்க அரும்பாடுபட்டவர். பல்வேறு இலக்கிய மாநாடுகளை நடத்திக் காட்டிய தமிழ் கவிஞர்.

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய விழாக்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அருமையான, ஆழமான உரைகளை நிகழ்த்தியவர் இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

வல்ல இறைவன் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களை பொருத்திக் கொள்வானாக..
அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அய்மான் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.