ஜனவரி 28 ஆம் தேதி மாலை அய்மான் சங்கத்தின் மாபெரும் மீலாது நபி பெருவிழா.

12400576_953153588067687_270987396318076768_n

அஸ்ஸலாமு அழைக்கும் வராஹ்.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 28 ஆம் தேதி மாலை அய்மான் சங்கத்தின் மாபெரும் மீலாது நபி பெருவிழா.

சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

அனைவரும் தவறாமல் வருகைதருமாறு அய்மான்  சங்கத்தின் நிர்வாகிகள் கேட்டுகொள்கிறார்கள்.
12400576_953153588067687_270987396318076768_n

44 வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அய்மான் சங்கமம் நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அழைக்கும் வராஹ்.

இன்று 03/12/2015 அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் 44 வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அய்மான் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

12342818_1006145802757909_6658316849970869341_n12346379_1006162399422916_1769640923706008638_n

12289528_1006347716071051_7382956225712110384_n12316415_1006346906071132_496866014384884788_n

நிகழ்வில் சிறுவர் ,சிறுமியர்,ஆண்கள், பெண்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் மருத்துவ பரிசோதனை, சிறியோர் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளும், பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.

விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு தங்க காசு,மொபைல் போன்கள்,வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதியும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமிருந்து பெறப்பட்டது.

மருத்துவ பரிசோதனையையும், புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த விளக்கத்தையும் காயல். டாக்டர் சையத் அஹமது சிறப்புற வழங்கினார்.

ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்கள்,சகோதர சமுதாயத்தைச் சார்ந்த சகோதரர்கள் என பலரும் பங்கேற்றனர்.

அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சியை மிக சிறப்புடன் ஒருங்கிைணைத்திருந்தனர்.

ஹிஜ்ரி இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி

prof_semumu2

ஹிஜ்ரி இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் உள்ள Ruchi Restaurant Baunqet ஹாலில் நேற்றிரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன், பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் நாகூர் அப்துல் ஹமீத் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹாஃபிழ் முஹம்மது இத்ரீஸ் மரைக்காயர் இறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை அப்துல்ரஹ்மான் ரப்பானி வரவேற்புரையாற்ற, சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீத் நிகழ்ச்சியை பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.

அதிரை கவியன்பன் கலாம் சிறப்பு கவிதைகளை வாசித்தார்.

அய்மான் சங்கத்தின் கீழை சையது ஜாஃபர் திருச்சியில் இயங்கி வரும் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நடப்பறிக்கை நிகழ்த்த, ஹிஜ்ரா வரலாற்றை காயல் ஹுசைன் மக்கீ ஆலிம் மஹ்ழரி ஹள்ரத் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமானியும், சென்னையில் இயங்கி வரும் இக்ராஃ அகாடமியின் நிறுவனருமான கேப்டன் மத்தீன் ரப்பானி சிறப்புரையாற்றினார்.

எஸ் – ஐஏஎஸ் அகாடெமியின் செயல் இயக்குனரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியரும், முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளருமான பேராசிரியர், முனைவர் சேமுமு முஹம்மது அலி கல்வி- ஆட்சி அதிகாரம் ஆகியவற்றின் அவசியத்தை குறித்து விளக்கி நிறைவு பேருரையாற்றினார்.

அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ நன்றியுரை நிகழ்த்த, ஷர்ஃபுத்தீன் மன்பஈ அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத், இந்திய முஸ்லிம் பேரவை (IMF), அமீரக காயிதேமில்லத் பேரவை, மௌலிது கமிட்டி ஆகியவற்றின் நிர்வாகிகளும், பல்வேறு ஊர்களை சார்ந்த சகோதரர்களும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் சங்க நிர்வாகிகள் மற்றும் சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க நிர்வாகிகளான கீழை ஜமால், திருவாடுதுறை அன்சாரி பாட்ஷா, காயல் ஷேக்னா, காயல் அன்சாரி, களமருதூர் ஷர்ஃபுத்தீன், லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மன்பஈ, ஆடுதுறை அப்துல் காதர், நாகூர் ரஷீத் மரைக்காயர், லால்பேட்டை சல்மான், காயல் லெப்பை தம்பி, கீழை ஃபஹ்ருல் பையாஜ், லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.image1

image2.jpeg

image3

image4

image5

image6

prof_semumu3

prof_semumu4

prof_semumu5

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு!

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மிஃராஜ் இரவு  ( 15/05/2015) சிறப்பு சொற்பொழிவு!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலகப் பயணத்தின் (மிஃராஜ் இரவின்) சிறப்புகள்,அற்புதங்களை விளக்கும் விதமாக அபுதாபி ஹம்தான் ரோட்டில் உள்ள அல்-மன்சூரி பிளாஸா பில்டிங்கில் இன்று  ( 15/05/2015) அய்மான் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

10982035_907640815941742_3858992760594786_n11008506_907641022608388_3092157445313649729_n

11111601_907640959275061_2578668504469267918_n11163192_907641039275053_269445963869447062_n

நிகழ்ச்சிக்கு அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.
அய்மான் நிர்வாகக் குழு உறுப்பினர் கொள்ளுமேடு மெளலவி ஏ.முஹம்மது ஹாரிஸ் இறைமறை வசனங்கள் ஓதினார்.

அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தாயகத்தில் இருந்து வருகை புரிந்த சென்னை பூந்தமல்லி காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரியின் பேராசிரியரும், மனாருல்ஹுதா மாத இதழின் இணை ஆசிரியருமான மெளலவி அல்ஹாஜ்.ஷேக் அப்துல் காதிர் காஷிஃபி,”மிஃராஜ் படிப்பினை மாந்தர்க்குதரும் நல்வினை” என்ற தலைப்பிலும்,
அபுதாபி தமிழக மார்க்க அறிஞர் மெளலவி முஹம்மது பாஷா ரஷாதி பெருமானார் (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தொழுகையை தவறாமல் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் விளக்கிப் பேசினர்.

இறுதியில் அய்மான் நிர்வாகக் குழு உறுப்பினர் லால்பேட்டை யூ.சல்மான் பாஃரீஸ் நன்றி கூற துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை அய்மான் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.

அய்மான் மக்கள் மன்றம்!!!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!

அல்லாஹ்வின் உதவியால் அபுதாபியில் அய்மான் மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது!

11182803_905439159495241_560831192597382842_o10700467_905439236161900_6864914520913342705_o

11159928_905439619495195_1788002043507709730_o10830807_905439372828553_2255532986036752979_o

11203555_905440736161750_8914885271995181254_o11255821_905440949495062_1313736121316056961_o

அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அய்மான் மக்கள் மன்றம் சனிக்கிழமை ( 09/05/2015 ) மாலை செட்டிநாடு உணவக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.
சமுதாயப் புரவலர் நோபல் மரைன் அதிபர் எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத் முன்னிலை வகித்தார்.

கொள்ளுமேடு மெளலவி இர்பானுல்லாஹ் மன்பஈ இறைமைரை வசனங்களோடு நிகழ்ச்சி துவங்கியது.

அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சகோ.தமீம் “பள்ளி செல்லுங்கள்” திட்டம் குறித்து சிற்றுரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக தாயகத்திலிருந்து வருகை புரிந்த சம உரிமை மாத இதழின் ஆசிரியரும்,சமூக,கல்வி,பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவருமான அல்ஹாஜ்.எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹ் சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் பைத்துல் மால் அவசியத்தை வலியுறுத்தியதோடு,அதற்காக பாடுபடும் அய்மானின் பைத்துல் மால் திட்டத்தில் இணைந்து செயல்பட கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்கள் பங்களிப்பை அய்மான் பைத்துல் மால் நிதிக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் சமுதாயப் புரவலர் பனியாஸ் நிறுவன அதிபர் அல்ஹாஜ்.அப்துல் ஹமீது மரைக்காயர்,இந்தியன் முஸ்லிம் பேரவை முன்னாள் தலைவர் ஷர்புத்தீன் ஹாஜியார்,அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமை ஆசிரியர் ஷேக் அலாவுத்தீன் மற்றும் சமுதாய அமைப்புக்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அமீரக காயிதேமில்லத் பேரவை, தமுமுக,எஸ்டிபிஐ,பல்வேறு ஊர் ஜமாஅத்தின் நிர்வாகிகள்,சமுதாய ஆர்வலர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

இறுதியாக அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி நன்றி கூற மெளலவி ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்லரி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை அய்மான் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.

கனடா தமிழ்ச் சங்க இயக்குனர் கவிஞர் சகோதரர் “அன்புடன் புகாரி “க்கு வரவேற்பு!

கனடா தமிழ்ச் சங்க இயக்குனர் கவிஞர் சகோதரர் “அன்புடன் புகாரி “க்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி (23-02-2015) அன்று அபுதாபியில் நடைபெற்றது.

11018774_868540936518397_3914874774762137189_n10982130_868541206518370_6001553235069867880_n10991262_868541179851706_6139744076237033302_n10944704_868541153185042_1168356718161824146_n

கனடா தமிழ்ச் சங்க இயக்குனர் கவிஞர் சகோதரர் “அன்புடன் புகாரி ” அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்க்கு வருகை தந்திருக்கிறார்.அவருக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள செட்டிநாடு உணவகத்தில்  (23-02-2015) அன்று இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார்கள், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை மௌலவி முஹம்மது அப்பாஸ் இறைமறை வசனங்களை ஓதினார்.சங்கத்தின் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் அய்மான் சங்கத்தைப் பற்றியும், அதிரை கவிஞர் கலாம் சிறப்பு விருந்தினர் கவிஞர் ” அன்புடன் புகாரி “யைப் பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தினர்.அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொருளாளர் கீழை SKS ஹமீதுர்ரஹ்மான், S.S.மீரான் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கனடா தமிழ்ச் சங்க இயக்குனர் சகோதரர் “அன்புடன் புகாரி ” ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் அய்மான் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திருவாடுதுறை அன்சாரி பாஷா,காயல் அன்சாரி,கொள்ளுமேடு மௌலவி முஹம்மது ஹாரிஸ், மக்கள் தொடர்புச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.அய்மான் சங்கத்தின் செயலாளர் லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான் நன்றி கூற லால்பேட்டை சல்மான் ஃபாரிஸ் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்கம் மிகச் சிறப்பாக செய்திருந்தது

SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்களுக்கு வரவேற்பு!!!

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில், அமீரகம் வருகை தந்துள்ள SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்களுக்கு (26-01-2015) அன்று அபுதாபி செட்டிநாடு உணவகத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

10943727_854691181236706_3970747627287797975_n (1)10949715_854691454570012_6291823105838018313_n10675526_854691507903340_7572756167115778799_n10952082_854691377903353_9193709078461787343_n10635995_854691524570005_7330759528536945638_n10952276_854691521236672_1279229356069235267_n

சங்கத் தலைவர் அல்ஹாஜ் அதிரை ஷாகுல் ஹமீது தலைமை வகித்தார்கள் மேலும் பொதுச் செயலாளர் காயல் SAC ஹமீது வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில்அய்மான் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த‌ நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வின் இறுதியில் அய்மானின் மூத்த நிர்வாகியான பெரியபட்டிணம் அல்ஹாஜ் ஜஹாங்கீர் அவர்கள் சிறப்பு அழைப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்

முக்கிய ஆலோசனை:-

தொடர்ந்து பேசிய SDPI மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை விவகாரம் போல் காயல்பட்டிணம் DCW ஆலையின் சுகாதார சீர்கேடு பிரச்சனையையும் தேசிய பிரச்சனையாக மாற்றி நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க‌ SDPI எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று உறுதி அளித்தார்

மேலும் சமுதாயத்தின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக SDPI ஒரு காலமும் செயல் படாது என்றும் உறுதியளித்தார்கள்

இறுதியில் சல்மான் பாரிஸ் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மீலாது நபி விழா

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மீலாது நபி விழா 08-01-2015 வியாழன் மாலை அபுதாபி ருச்சி ரெஸ்டரண்ட் பென்குயிண்ட் அரங்கில் மிக சிறப்புடன் நடந்து.

10919018_846043572101467_3018589672905473272_n10898230_846043652101459_2497517322959829714_n10917874_846043582101466_6356366531560524386_n10922773_846043618768129_5202806244661177851_n10924754_846043715434786_2357442265450920413_n10906571_846043962101428_7752295283803283796_n

அபுதாபி அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது நிகழ்ச்சிக்கு தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார்கள்.

கொள்ளுமேடு மெளலவி இர்பனுல்லாஹ் மன்பஈ கிராஅத் ஓதினார்.
திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் துவக்கவுரையாற்றினார்.
வத்தலக்குண்டு கன்சுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் நிறுவனர் மெளலவி ஷம்சுல் ஹுதா ரஷாதி,கருப்பூர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மௌலவி ஷாஜஹான் உஸ்மானி,ஆகியோர் சிற்றுரை நிகழ்த்தினர்.
அய்மான் பைத்துல் மால் பற்றிய அறிமுகவுரையை மெளலவி ஹாபிழ்.ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி நிகழ்த்தினார்.

தீன் இசை பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் இஸ்லாமிய கீதங்கள் இசைத்தார்.
நிகழ்ச்சியின் நிறைவுப் பேருரையை காயல்பட்டினம் மஹ்லரா அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி கே.எம்.காஜா முஹையதீன் பாகவி நிகழ்த்தினார்.
பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்களுக்கு இரங்கல்
உலகத் தொழில் அதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்து,அனைத்து துறைகளிலும் சிறப்பாக சேவையாற்றிய கல்வித் தந்தை,சமுதாய ஒளி விளக்கு டாக்டர்.பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்காக இரங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது,முன்னதாக அன்னாரின் மஃக்பிரத்திற்காக யாஸீன் ஓதப்பட்டு, அவரைப்பற்றிய நற்குணங்கள் நினைவுக் கூறப்பட்டது.

இரங்கல் உரையை பி.எஸ்.ஏ.அவர்களின் செயலாளராக பணியாற்றிய அய்மான் சங்க முன்னாள் தலைவர் கீழை.சைய்யது ஜாஃபார்,அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அதிரை கவியன்பன் கலாம் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியை அய்மான் சங்க செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி,துபாய் ஈமான் அமைப்பின் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹையத்தீன்,அய்மான் கல்லூரி ஹபீபுல்லாஹ், அபுதாபி ஐ.எம்.எஃப்.ஷர்புத்தீன் ஹாஜியார்,காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள்,மெளலிது கமிட்டி நிர்வாகிகள்,பல்வேறு ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்களை அய்மான் பைத்துல் மால் திட்டத்தில் ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை அய்மான் நிர்வாகிகளான கீழை.முஹம்மது ஜமாலுத்தீன்,துணைத் தலைவர் திருவாடுதுறை அன்சாரி பாஷா,செயலாளர் களமருதூர் ஷர்புத்தீன்,செயற்குழு உறுப்பினர்களான காயல் சேக்னா,லால்பேட்டை முஹம்மது அப்பாஸ்,ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்,உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இறுதியாக அய்மான் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை சல்மான் பாரிஸ் நன்றி கூற,மெளலவி ஹுஸைன் மக்கி ஆலிம் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களுக்கு வரவேற்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச்செயலாளர் தமிழக தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாழும் காயிதேமில்லத் வரலாற்றுப் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களுக்கு அபுதாபி செட்டிநாடு ஹோட்டலில்  (12-12-2014) அன்று மிக சிறப்பாக அமீரக அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.

அபுதாபியில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காக உழைக்கும் அய்மான் சங்கத்தின் சேவைகளை பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் பாரட்டினார்கள்.

 

1IMG_1858IMG_2097IMG_2092IMG_2017

 

அபுதாபியில் காயிதேமில்லத் ஆவணப்படம் வெளியீட்டு விழா

அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை மற்றும் அய்மான் சங்கம்- அபுதாபி  (04/12/2014)  இணைத்து நடத்திய காயிதேமில்லத் ஆவணப்படம் வெளியீட்டு விழா!!!

qiad1507056_826094630763028_8870115965871131885_n1907867_825625807476577_6816012665583120153_n10848022_825625814143243_1804197341696926687_n10502401_825625817476576_4775096385053876957_n1506780_826094767429681_2473867737576870627_n1412

ஒரு சில நினைவுகள் :-

இந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாகிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. அங்கிருந்த அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் லியாக்கத் அலிகான் காயிதேமில்லத் சாஹிபிடம் ‘சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் சொல்லுங்கள்.

உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது’ என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் ‘ எப்போது எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். நீங்கள் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபாண்மை இந்துக்கள்,கிற்ஸ்துவர்களின் நலனில் கவனம் செலுத்துங்கள் எனவே உம் உதவி எமக்குத் தேவையில்லை என்றார் கோபமாக‌ என்ற வரலாற்று சம்பவம் அபுதாபியில் காயியேமில்லத் ஆவண பட விழாவில் நினைவூட்டப்பட்டது.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீட்டில் ஆளூர் ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா 4 ம் தேதி மாலை மணியளவில் அபுதாபியில் நடைபெற்றது.அப்போது காயிதேமில்லத வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன‌

காயிதேமில்லத் பேரவை உறுப்பினர் லால்பேட்டை சல்மான் நிகழ்ச்சியின் தலைமையை முன்மொழிய பேரவையின் செயலாளர் வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா வழிமொழிந்தார்.நிகழ்ச்சிக்கு அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமை தாங்கினார். அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹீல் ஹமீத் அமீரக காயிதேமில்லத் பேரவை துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிரை தவ்சீஃப் ரஹ்மதுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதினார்.அமீரக காயிதேமில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் லால்பேட்டை A.S.அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.பேரவையின் பொதுச்செயலாளர் முஹம்மது தாஹா வரவேற்புரையாற்ற பேரவையின் பொருளாலர் ஹமீதுர்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார்.

அபுதாபி நோபல் குழும நிர்வாக இயக்குனர் சமுதாய புரவலர் ஷாஹீல் ஹமீத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆடுதுறை A.M.ஷாஜஹான்மாநில துணைச் செயலாளர் மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில் மாநில உடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ST கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி கருத்துரை வழங்க ஆவணப்பட இயக்குனர்ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.யிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் M.அப்துர்ரஹ்மான் Ex MP அவர்கள் நிறைவுரையாற்றினார்.

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தின் சிடியை முன்னாள் எம்பி அப்துர்ரஹ்மான் வெளியிட அதன் முதல் பிரதியை சாஹீல் ஹமீத் நவாஸ் கனி இரண்டாம் பிரதியை அய்மான் சங்கத்தின் சையது ஜாஃபர் மூன்றாம் பிரதியை அய்யம்பேட்டை வாலன் ஜெய்லான் பாட்ஷா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

கண்ணியத்திற்குரியகாயிதேமில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் திரையிடப்பட்டது.
அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் நன்றியுரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந் நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள தமிழ் மக்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையும்  மற்றும் அபுதாபி அய்மான் சங்கம் இணைத்து நடத்தப்பட்டது

1 2 3