அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மீலாது நபி விழா

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மீலாது நபி விழா 08-01-2015 வியாழன் மாலை அபுதாபி ருச்சி ரெஸ்டரண்ட் பென்குயிண்ட் அரங்கில் மிக சிறப்புடன் நடந்து.

10919018_846043572101467_3018589672905473272_n10898230_846043652101459_2497517322959829714_n10917874_846043582101466_6356366531560524386_n10922773_846043618768129_5202806244661177851_n10924754_846043715434786_2357442265450920413_n10906571_846043962101428_7752295283803283796_n

அபுதாபி அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது நிகழ்ச்சிக்கு தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார்கள்.

கொள்ளுமேடு மெளலவி இர்பனுல்லாஹ் மன்பஈ கிராஅத் ஓதினார்.
திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் துவக்கவுரையாற்றினார்.
வத்தலக்குண்டு கன்சுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் நிறுவனர் மெளலவி ஷம்சுல் ஹுதா ரஷாதி,கருப்பூர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மௌலவி ஷாஜஹான் உஸ்மானி,ஆகியோர் சிற்றுரை நிகழ்த்தினர்.
அய்மான் பைத்துல் மால் பற்றிய அறிமுகவுரையை மெளலவி ஹாபிழ்.ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி நிகழ்த்தினார்.

தீன் இசை பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் இஸ்லாமிய கீதங்கள் இசைத்தார்.
நிகழ்ச்சியின் நிறைவுப் பேருரையை காயல்பட்டினம் மஹ்லரா அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி கே.எம்.காஜா முஹையதீன் பாகவி நிகழ்த்தினார்.
பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்களுக்கு இரங்கல்
உலகத் தொழில் அதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்து,அனைத்து துறைகளிலும் சிறப்பாக சேவையாற்றிய கல்வித் தந்தை,சமுதாய ஒளி விளக்கு டாக்டர்.பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்காக இரங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது,முன்னதாக அன்னாரின் மஃக்பிரத்திற்காக யாஸீன் ஓதப்பட்டு, அவரைப்பற்றிய நற்குணங்கள் நினைவுக் கூறப்பட்டது.

இரங்கல் உரையை பி.எஸ்.ஏ.அவர்களின் செயலாளராக பணியாற்றிய அய்மான் சங்க முன்னாள் தலைவர் கீழை.சைய்யது ஜாஃபார்,அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அதிரை கவியன்பன் கலாம் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியை அய்மான் சங்க செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி,துபாய் ஈமான் அமைப்பின் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹையத்தீன்,அய்மான் கல்லூரி ஹபீபுல்லாஹ், அபுதாபி ஐ.எம்.எஃப்.ஷர்புத்தீன் ஹாஜியார்,காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள்,மெளலிது கமிட்டி நிர்வாகிகள்,பல்வேறு ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்களை அய்மான் பைத்துல் மால் திட்டத்தில் ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை அய்மான் நிர்வாகிகளான கீழை.முஹம்மது ஜமாலுத்தீன்,துணைத் தலைவர் திருவாடுதுறை அன்சாரி பாஷா,செயலாளர் களமருதூர் ஷர்புத்தீன்,செயற்குழு உறுப்பினர்களான காயல் சேக்னா,லால்பேட்டை முஹம்மது அப்பாஸ்,ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்,உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இறுதியாக அய்மான் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை சல்மான் பாரிஸ் நன்றி கூற,மெளலவி ஹுஸைன் மக்கி ஆலிம் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களுக்கு வரவேற்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச்செயலாளர் தமிழக தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாழும் காயிதேமில்லத் வரலாற்றுப் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களுக்கு அபுதாபி செட்டிநாடு ஹோட்டலில்  (12-12-2014) அன்று மிக சிறப்பாக அமீரக அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.

அபுதாபியில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காக உழைக்கும் அய்மான் சங்கத்தின் சேவைகளை பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் பாரட்டினார்கள்.

 

1IMG_1858IMG_2097IMG_2092IMG_2017

 

அபுதாபியில் காயிதேமில்லத் ஆவணப்படம் வெளியீட்டு விழா

அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை மற்றும் அய்மான் சங்கம்- அபுதாபி  (04/12/2014)  இணைத்து நடத்திய காயிதேமில்லத் ஆவணப்படம் வெளியீட்டு விழா!!!

qiad1507056_826094630763028_8870115965871131885_n1907867_825625807476577_6816012665583120153_n10848022_825625814143243_1804197341696926687_n10502401_825625817476576_4775096385053876957_n1506780_826094767429681_2473867737576870627_n1412

ஒரு சில நினைவுகள் :-

இந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாகிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. அங்கிருந்த அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் லியாக்கத் அலிகான் காயிதேமில்லத் சாஹிபிடம் ‘சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் சொல்லுங்கள்.

உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது’ என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் ‘ எப்போது எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். நீங்கள் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபாண்மை இந்துக்கள்,கிற்ஸ்துவர்களின் நலனில் கவனம் செலுத்துங்கள் எனவே உம் உதவி எமக்குத் தேவையில்லை என்றார் கோபமாக‌ என்ற வரலாற்று சம்பவம் அபுதாபியில் காயியேமில்லத் ஆவண பட விழாவில் நினைவூட்டப்பட்டது.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீட்டில் ஆளூர் ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா 4 ம் தேதி மாலை மணியளவில் அபுதாபியில் நடைபெற்றது.அப்போது காயிதேமில்லத வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன‌

காயிதேமில்லத் பேரவை உறுப்பினர் லால்பேட்டை சல்மான் நிகழ்ச்சியின் தலைமையை முன்மொழிய பேரவையின் செயலாளர் வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா வழிமொழிந்தார்.நிகழ்ச்சிக்கு அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமை தாங்கினார். அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹீல் ஹமீத் அமீரக காயிதேமில்லத் பேரவை துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிரை தவ்சீஃப் ரஹ்மதுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதினார்.அமீரக காயிதேமில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் லால்பேட்டை A.S.அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.பேரவையின் பொதுச்செயலாளர் முஹம்மது தாஹா வரவேற்புரையாற்ற பேரவையின் பொருளாலர் ஹமீதுர்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார்.

அபுதாபி நோபல் குழும நிர்வாக இயக்குனர் சமுதாய புரவலர் ஷாஹீல் ஹமீத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆடுதுறை A.M.ஷாஜஹான்மாநில துணைச் செயலாளர் மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில் மாநில உடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ST கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி கருத்துரை வழங்க ஆவணப்பட இயக்குனர்ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.யிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் M.அப்துர்ரஹ்மான் Ex MP அவர்கள் நிறைவுரையாற்றினார்.

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தின் சிடியை முன்னாள் எம்பி அப்துர்ரஹ்மான் வெளியிட அதன் முதல் பிரதியை சாஹீல் ஹமீத் நவாஸ் கனி இரண்டாம் பிரதியை அய்மான் சங்கத்தின் சையது ஜாஃபர் மூன்றாம் பிரதியை அய்யம்பேட்டை வாலன் ஜெய்லான் பாட்ஷா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

கண்ணியத்திற்குரியகாயிதேமில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் திரையிடப்பட்டது.
அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் நன்றியுரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந் நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள தமிழ் மக்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையும்  மற்றும் அபுதாபி அய்மான் சங்கம் இணைத்து நடத்தப்பட்டது

அய்மான் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி & அரபு அமீரகத்தின் 43- ஆவது தேசிய தினம் விழா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் நடைபெற்ற அய்மான் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி  மற்றும்  அரபு அமீரகத்தின் 43- ஆவது தேசிய தினம் விழா வெகு விமரிசையாக இன்று (02/12/2014) கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கணியதிற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் ஆவணப்பட இயக்குநர் சகோ. ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

முக்கிய அம்சங்கள்:-

1) மருத்துவ சோதனை!
2) மருத்துவம் மற்றும் அறிவியல் வினா விடைகள்!
3) ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்சிகள்!
4) அனைவர்க்கும் மதிய உணவு உபசரிப்புகள்
5) இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

10411994_824891140883377_5506713739261426106_n10367791_824891450883346_472359799378140314_n

10481922_824891704216654_2375229009150927669_n10847852_824891527550005_6116308557624794238_n10801892_824892587549899_7000656495680535080_nIMG-20141202-WA0015

அமிரகதிற்கு வருகைதந்துள்ள சகோ.ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு வரவேற்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு  அமிரகதிற்கு வருகைதந்துள்ள சகோ.ஆளூர் ஷா நவாஸ் அவர்களை அபுதாபியில் (01-12-2014) அன்று அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நடத்தப்பட்டது

வரவேற்பு நிகச்சியில் அய்மான் சங்க தலைவர் அல்ஹாஜ் அதிரை சாகுல் ஹமீது,பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது,லால்பேட்டை அப்துல் ரஹ்மான் மற்றும் அய்மான் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள் .

qiaஅபுதாபி அய்மான்

அபுதாபி அய்மான் சங்கத்தில் இனிய திசைகள் அறிமுக நிகழ்ச்சி

அபுதாபி அய்மான் சங்கத்தில் இனிய திசைகள் அறிமுக நிகழ்ச்சி

இனிய திசைகள்

அபுதாபி அய்மான் சங்கத்தில் இனிய திசைகள் அறிமுக நிகழ்ச்சி 21.11.2014 வெள்ளிக்கிழமை மாலை செட்டிநாடு உணவகத்தில் நடைபெற்றது.

அபுதாபி அய்மான் சங்க தலைவர் அல்ஹாஜ் அதிரை சாகுல் ஹமீது இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு இதழை அறிமுக செய்து வெளியிட பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது பெற்றுக் கொண்டார்.

அய்மான் சங்க தலைவர் அல்ஹாஜ் அதிரை சாகுல் ஹமீது அவர்கள் தனது உரையில் கடந்த 12 ஆண்டுகளாக இனிய திசைகள் மாத இதழ் முனைவர் பேராசிரியர் சேமுமு அவர்களை ஆசிரியராகக் கொண்டு சமுதாய மேம்பாட்டுக்கு முக்கியப் பங்காற்றி வருவது பெருமிதம் அளிப்பதாக தெரிவித்தார். எவ்வித வணிக நோக்கும் இன்றி செயல்பட்டு வரும் இனிய திசைகள் மாத இதழுக்கு சமுதாய மக்கள் தங்களது ஆதரவினை நல்க வேண்டியது அவசியமானது என்றார்.

நிகழ்வில் பொருளாளர் ஹமீது ஜமாலுதீன், காயல் VST ஷேக்னா, லால்பேட்டை அப்துல் ரஹ்மான், ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்(MAK), காயல் அன்சாரி, ரிஃபாயி சுல்தான், மௌலவி ஷர்புதீன் மன்பயீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Eniya Thisaigal

Join hand with AIMAN CHARITABLE TRUST in Kashmir Relief Program

Torrential rains have caused massive destruction and severe distress in the state of Jammu and Kashmir with several fatalities and large numbers displaced. Several houses, especially in low lying areas, have been washed away or entirely damaged. More than 2500 major and minor roads have been damaged, numerous footbridges washed away and more than 100 motorable bridges damaged. There has been a major communication and power breakdown due to transformers and towers being damaged. Relief operations by the Army, Indian Air Force, National Disaster Management Authority and other agencies have rescued over 237,000 people who are in relief camps or in the process of being evacuated from the state, although about 200,000 people still remain stranded.

AIMAN CHARITABLE TRUST has joined hands with Caritas India in providing the much needed relief. Caritas India is an NGO operating in India and it is one of the pioneers in providing relief, rehabilitation and restoration programs. Please be generous in contributing your donations.

You may send us the cheque / DD along with your complete address and PAN. If you are transfering to our accounts directly, please write to our email about the transfered amount, date and your complete address.

Please send your contribution to :

CARITAS INDIA,
THE SOUTH INDIAN BANK LTD, NEW DELHI,
A/C NO. 0153053000007238
IFSC/NEFT: SIBL0000153

AIMAN CHARITABLE TRUST,
ICICI BANK, CHENNAI
A/C NO. 602005120929
Contact in UAE:+971-504917709
Email: ashahul@gmail.com

aiman kashmir brochure 1

புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

Assalamu Alaikkum (WRWB)
Ramadan Kareem!
Insha Allah, Abu Dhabi Lailath-Ul-QADR Committee invites you for the LAILATH-UL-QADR Night Special Prayers and Bayaan Program (in TAMIL) on 24th JULY 2014, Thursday evening – Friday Night (27th Ramadan, 1435H) at 08:30 pm at Indian Islamic Centre – Ground Floor Main Auditorium in Abu Dhabi(intersection of Old Pass Port Road and Al Salam Street Corner – Near ADDC) The function will inshaa Allah start with the Isha prayer, followed by Tharaaveeh & Thasbeeh prayers and proceed with the Special Lecture in Tamil by Moulana Moulavi J. Jahir Hussain, Fazil Manbayee.
Professor, J.M.A. Arabic College Lalpet – Tamil Nadu.After the Special Lecture Dua Al Thawbah will be performed.
ending with Dua Al Barakha.

All are cordially invited to join with their family and get the blessings of Al Mighty Allah.
Note:
· Separate place for Ladies arranged.
· Suhoor Food (Take away packs) will be served for all after the function.
· For the People coming from MUSSAFAH, bus service has been arranged on 24/07/2014 Thursday evening at 8:00 pm from Mussafah ICAD Residential Camp Gate – 2.
(Contact: Mr. Abdul Jabbar 050-7911239; Haji Sharfudeen Alim 055-6413405);

o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o- o0o-

அன்புடையீர் , அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது அபுதாபி புனித லைலத்துல் கத்ர் கமிட்டி சார்பில்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்
24/07/2014 அன்று ஹிஜ்ரி 1435 ரமலான் பிறை 27,
வியாழன் மாலை வெள்ளி இரவு 8:30 மணியளவில்
மௌலவி அல்ஹாபிழ் ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரி
நடாத்தலில் புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் இஷா தொழுகை, தராவீஹ் மற்றும் தஸ்பீஹ் தொழுகைகளை தொடர்ந்து சிறப்பு பேருரை நடைபெறும்.

சிறப்பு பேருரை
மெளலானா மௌலவி J. ஐாஹிர் ஹூசைன் பாஷில் மன்பஈ
பேராசிரியர் J.M.A. அரபிக் கல்லூரி லால்பெட்.

After the Special Lecture Dua Al Thawbah will be performed.
Ending with Dua Al Barakha.

இடம் :
இந்தியன் இஸ்லாமிக் செண்டர் ஆடிட்டோரியம், பாஸ்போர்ட் ரோடு, அபுதாபி.
ஒன்றுக்கு பல ஆயிரம் தவாபு கிடைக்கும் புனித ரமலான் மாதத்தில் அனைவர்களும் குடும்பத்துடன் வந்து, கலந்து அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும், அருளையும்’ பெற அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு:
· பெண்களுக்கு தனியிட வசதி உண்டு,
· அனைவருக்கும் ஸஹர் உணவு (Take away Packs) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
· முஸஃப்பாவில் உள்ளவர்களுக்கு ICAD Residential Camp Gate – 2 வில் இருந்து இரவு 8 மணிக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
(Contact: Mr. Abdul Jabbar 050-7911239; Haji Sharfudeen Alim 055-6413405); .

For more information and clarification, please contact:
Mr. Sharbudeen Hajiar – 050-4103126
Mr. Mohideen Abdulcader – 050-4441861
Mr. Siddiq – 050-6723050
Mr. S.A.C. Hameed – 050-6212569
Mr. Abdul Rahman – 050-2821852
Mr. Aaawai Ansari – 050-5463510;
Mr.Abdul Jabbar – 050-7911239
Mr. Amanullah Khan – 050-2820363
Moulavi Habeeb Rahman Mahlari – 050-6174304
Mr. M. Shuaib Lalpet – 050-6671977
Mr. Khader Meeran – 050-5661493
Mr. Jubair – 050-1302961;
Mr. Lalpet Rafi – 050-9361895
Mr. Ashraf Ali Maraikayer – 050-7523058
Mr. Omer Ansari – 055-9100909;
Haji Sarbudeen Alim – 055-6413405
Mr. A. Shahul Hameed– 050-7824129;

அபுதாபி அய்மான் சங்கம் இஃப்தார் மற்றும் பத்ர் போர் நினைவு தினம்!

அபுதாபி அய்மான் சங்கம் இஃப்தார் மற்றும் பத்ர் போர் நினைவு தினம்!
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் செயல்படும் அய்மான் சங்கத்தின் சார்பில் இஃப்தார் விருந்து மற்றும் பத்ர் சஹாபாக்கள் நினைவு தின நிகழ்ச்சி சிறப்போடு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.
ஹாபிழ் முபாரக் அலவி இறைமறை வசங்கள் ஓதினார். அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியின் துவக்கவுரையை அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் பெரியபட்டினம் மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ நிகழ்த்தினார்.

பத்ர் போரின் நிகழ்வுகளையும் அதில் கலந்து கொண்ட நபித் தோழர்களின் தியாகங்களையும் விவரித்து லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மெளலவி ஜெ.ஜாக்கிர் ஹுஸைன் பாஜில் மன்பஈ சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் இறையச்சத்தின் அவசியத்தைப் பற்றியும் சமுதாயத்தில் தோன்றும் பிரச்சினைகளை எவ்வாறு கையாண்டு தீர்வு காண்பது என்பதை விளக்கியும் உரையாற்றினார்.

ஹாபிழ் மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்லரி சிறப்பு துஆ ஓதினார்.

சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் விதத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மானுக்கு சமுதாயப் புரவலர் நோபிள் மரைன் ஷாஹுல் ஹமீத் அவர்களும்,லால்பேட்டை அரபிக் கல்லூரிப் பேராசிரியர் மெளலவி ஜாக்கிர் ஹுஸைன் பாஜில் மன்பஈ அவர்களுக்கு திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் செயலாளர் கீழை சையத் ஜாஃபர் அவர்களும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.
அய்மான் சங்கத்தின் சேவைகளான திருக் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஆடியோ கேசட்,சிடி,அய்மான் மொபைல் குர்ஆன், அய்மான் மகளிர் கல்லூரியின் கல்விப் பணி,மக்கள் நலப் பணிகள் வரிசையில் மிக சமீபத்தில் உருவாகியிருக்கும் அய்மான் பைத்துல் மால் (அறக்கட்டளையில்) சேர்ந்து நன்மையடைய அனைவர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் விரைவில் 24 மணி நேரமும் இயங்கும் அய்மான் ரேடியோவில் திருக் குர்ஆன் ஒளிபரப்பு சேவைப் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் அபுதாபியில் செயல்பட்டு வரும் அமைப்புக்கள்,மற்றும் சமுதாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பல்வேறு ஊர் ஜமாஅத் அமைப்புக்களின் நிர்வாகிகள் சமுதாயப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது நிகழ்ச்சியை நெறிபடுத்தி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளான துணைத் தலைவர் திருவாடுதுறை அன்சாரி பாஷா,செயலாளர்கள் களமருதூர் ஷர்புத்தீன்,காயல்பட்டினம் முஹம்மது அன்சாரி,செயற்குழு உறுப்பினர்கள் காயல் ஷேக்னா லெப்பை,திருச்சி அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்சியில் அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் கீழ்க்காணும் கவிதையை வாசித்தார்கள்:

 ஆயிரம் எதிரிகள் அங்கேIMG-20140720-WA0023

…..ஆயுதம் அற்றவர் இங்கே
ஆயினும் இணங்கினர் அல்லாஹ்(வின்)
…ஆணையைத் தயக்கமும் இன்றி!

சொற்பமாய் இருப்பினும் வெற்றிச்
….சோபனம் தருவதே அல்லாஹ்(வின்)
அற்புதம் என்பதை அங்கே
…. அனைவரும் உணர்ந்திடச் செய்தான்!

வானவர்க் கூட்டமும் வந்து
…..வாளினால் வெட்டிட உதவ
ஆணவக் கூட்டமும் ஒழிந்து
…அக்களம் வென்றனர் காணீர்!

இச்சிறு கூட்டமும் வெற்றி
….இன்றியே அழியுமே யானால்
அச்சமாய் உன்னையும் அல்லாஹ்(என்று)
….அழைத்திட எவருமே உண்டோ”

நெற்றியைத் தரையினில் வைத்து
….நெகிழ்வுடன் நபிகளார்(ஸல்) வேண்ட
வெற்றியைத் தருவதை அல்லாஹ்
….வேகமாய் நிறைவுற செய்தான்!

தீனெனும் செடியினைக் காத்த
…தியாகிகள் இலையெனில் நாமும்
தீன்குல பிறப்பினில் இல்லை
…தியாகிகள் நினைவுகள் வேண்டும்

1 2 3 4